இயேசுவை நோக்கிப் பார்த்தல் Phoenix, Arizona, USA 64-0122 1தேவனுடைய வேதத்திலிருந்து என்னுடைய வார்த்தை தவறி போகுமென்றும், அவருடைய வார்த்தை தவறாது என்றும் நாம் அறிந்திருக்கிறோம் ஆகவே, நான் ஏசாயாவின் புத்தகத்திலிருந்து வேத வார்த்தைகளை வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன். இங்கே சில வேத வார்த்தைகளையும், சில குறிப்புகளையும் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளை என்னால் கூடுமான வரை சீக்கிரமாக சொல்லி சொல்லி நேரடியாக இன்றிரவு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க போவோம். (நாம் ஏசாயா: 45-க்கு திரும்பும் சமயத்தில்), இந்த கூட்டங்களில் ஒத்துழைத்த எல்லா ஊழியர்களுக்கும் நன்றி கூற இச்சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்கிறேன். 2என்னுடைய அருமையான நண்பனான சகோ. ஷோர்ஸ் (Shores) அசெம்பிளீஸ் ஆப் காடின் பிரதிநிதித்துவமாய் இங்கே இந்த பட்டினத்தில் இருக்கிறார். இயேசு நாமம் சபையைச் சேர்ந்த என்னுடைய இன்னொரு அருமையான நண்பர் சகோ. அவுட்லா (OutLaw) இன்டிபென்டன்ஸ் சபையைச் சேர்ந்த இன்னொரு அருமையான சகோ. புல்லர் (Fuller). இந்த மூன்று பேர்கள் மட்டுமல்ல. இவர்கள் மூன்று பெரிய சபைகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதற்கு முன்பாக ஊழியஞ் செய்த மற்ற ஊழியர்கள் எல்லோருமாக ஒத்துழைத்து இங்கு ஒன்று சேர்ந்து வந்துள்ளவர்களுக்கும் வந்திருக்கின்ற ஜனங்கள் யாவருக்கும் எனது நன்றி. உங்களுடைய ஜனங்களில் அநேகர் இக்கூட்டங்களில் சுகமடைந்திருக்கிறார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்த எல்லாவற்றையும் நான் நிச்சயமாக முயற்சித்தேன். சொல்லப்பட்டதும் செய்யப்பட்டதுமான யாவற்றையும் பரிசுத்தாவியானவர் தாமே நிச்சயப்படுத்துவார் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன் 3ஆக கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் வேதத்தை பார்ப்போம். ஏசாயா: 45-ம் அதிகாரம் 22-ம் வசனமுதல். “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். நானே தேவன் வேறொருவரும் இல்லை. முழங்கால்கள் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னை கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது. இது மாறுவது இல்லை என்கிறார். வாசிப்பதற்கான வேத வார்த்தைகளை நான் அதிகமாக படித்ததாக இல்லை. ஆனால் அது போதுமானதாயிருக்கிறது. ஏனென்றால் அவைகள் நித்தியமானவைகளாயிருக்கிறது அது தேவனுடைய வார்த்தை. இதை ஒரு பொருளாய் அழைக்க வேண்டுமானால் சுமார் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு பேச, ''இயேசுவை நோக்கிப் பார்த்தல்'' என்று சொல்ல விரும்புகிறேன். 4அதுதான் அனேக வருஷங்களின் அழைப்பாயிருக்கிறது. ''பூமியின் எல்லை யெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள்'' நான் அதை ஒருவிதமாக சற்று திருப்பி“ ஒவ்வொரு உலக முறைமையின் முடிவிலே விசேஷமாக என்னை நோக்கிப் பாருங்கள்'' என்று கூற விரும்புகிறேன். ஏனென்றால் உலக ஒழுங்குகளானது தங்களுடைய முடிவுகளுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும், அவர் தம்மை எப்பொழுதும் அவ்வளவு உண்மையாய் விளங்கப்படுத்துகிறார். ”உலகின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கி பாருங்கள்'' என்று நான் ஒருகால் சொல்லலாம். வேதம் சொல்லுகிறது ''பூமியின் எல்லையெங்கும் என்று பன்மையில்'' சொல்லுகிறது. “என்னை நோக்கிப் பாருங்கள் என்பதை நாங்கள் அநேக வருஷங்களாக கேட்டோம்'' என்று அநேகர் சொல்லுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் காரியம் என்னவென்றால்... கேள்வி என்னவென்றால், நீ நோக்கிப் பார்க்கும் போது எதை காண்கிறாய்? ''என்னை நோக் கிப்பார்'' என்று அநேக முறை உன்னை கேட்டாயிற்று. 5கேட்கின்ற ஜனங்கள் சொல்லுகிறார்கள் ''நோக்கிப் பார்“ என்று. நோக்கிப் பார் என்று சொல்லப்படும் போது, அதன் அர்த்தம் என்னவென்றால் ”மேலே பார் அல்லது அதைப் பார், வெளியே பார் கவனம் செலுத்து'' என்பதாகும். இங்கே தேவன் சொல்லுகிறார் “என்னை நோக்கிப் பாருங்கள், நான் தேவன், என்னையன்றி வேறொருவர் இல்லை,” என்று. நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கின்றதான இந்த நேரத்திலே, தேவனைக் காட்டிலும் அதிக திடமான, எதை நோக்கிப் பார்க்கக் கூடும்? தேவன் வார்த்தையாயிருக்கிறார். ஆகவே இன்றைக்கு உங்களுடைய பதிலுக்காக தேவனுடைய வார்த்தையை நோக்கி பாருங்கள். இந்த நாளின் பதிலை வேதம் உடையதாயிருக்கிறது. மற்ற நாட்களிலும் அது உடையதாயிருந்தது. அதை அது என்றைக்கும் உடையதாய் இருக்கின்றது. ஏனெனில் அது நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கின்ற கிறிஸ்துவாயிருக்கிறது. வேதம் பதிலை உடையதாயிருக்கிறது. ஏனென்றால் வேதமானது, இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்படுத்தலாயிருக்கிறது. உலகத்தின் அஸ்திபாரம் முதற்கொண்டே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியின் ரூபத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். இராஜாக்களின் ரூபத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். நியாயபிரமாணிகன் ரூபத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். ஏனென்றால் அவைகள் தான் அவர்; இராஜா, தீர்க்கதரிசி, நியாயபிரமாணிகன், தேவன். “இப்பொழுது அவர் சொல்லுகிறார்'' என்னை நோக்கிப் பாருங்கள் என்று. 6''நான் அதை செய்தேன்'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நீங்கள் எதை நோக்கிப் பார்த்தீர்கள் என்பதை அது பொருத்திருக்கிறது. நீங்கள் எதை நோக்கிப் பார்த்தீர்கள் என்பதையும் எங்கே பார்த்தாய் என்றும், எதற்காக அவரை நோக்கி பார்த்தாய் என்பதையும் அது தீர்மானிக்கிறது. நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவரை நோக்கிப் பார்ப்பதில் என்ன நோக்கத்தை உடையவனாய் இருக்கிறாய்? அது நீங்கள் என்னதிற்காக நோக்கிப் பார்த்தீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். வழக்கமாக ஜனங்கள் ஒரு கூட்டத்திற்கு, மார்க்க சம்மந்தமான கூடுதலுக்கு வருகிறார்கள். சேர்ந்து உட்கார்ந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய கூட்டத்தைக் கண்டுபிடிக்கும் படியாய் சிலர் போகிறார்கள். சிலர் ஓ! எனக்கு சொல்ல விரும்பவில்லை. ஆனால் அது உண்மை. சிலர் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளைக் காட்டும்படியாய் சபைக்கு போகிறார்கள். சிலர் சபைக்கு போகிறார்கள் ஏனென்றால் இதுதான் இந்த பட்டணத்திலேயே மிகவும் பெரிய சபை; அல்லது இதற்குத்தான் ஒரு சிறந்த பெயர் இருக்கிறது அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான ஜனத்தார் மட்டுமே இந்த சபைக்கு போவார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் அது தவறானது? புரிகின்றதா? சபையானது எதற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்ற சரியான காரணத்தை நீ பார்க்காதபடியினால் ''என்னை நோக்கி பாருங்கள்'' என்று தேவன் சொல்லுகிறார். மற்றவர்களால் காணப்பட வேண்டுமென்பதற்காகவே அனேக ஜனங்கள் ஆராதனைக்குப் போகிறார்கள். இதில் அதிக நேரம் கவனத்தை செலுத்துவது நன்றாக இல்லை. ஆனால் அவர்கள் போவதற்கு முன்பாகவே மனதில் நிர்ணயித்தவர்களாய் சபைக்கு போகிறார்கள். ஒருவேளை சிலகாரியங்கள் சொல்லப்படுமானால் அல்லது அவர்களுடைய கருத்திற்கு மாறுபட்டதாய் சொல்லப்படுமானால், உடனடியாக எழும்பி நேராக வெளி நடப்பார்கள். அவர்களால் அதை பொறுக்க முடியாது ஏனென்றால் அது என்னவாய் இருக்க வேண்டுமென்று அவர்கள் முன்னதாகவே தங்களுடைய சொந்த கருத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். 7அதே காரணத்தின் நிமித்தமாக தான், இயேசுவானவர் உலகத்திற்கு வந்தபோது, அவரை புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. அவர்கள் மட்டும் அந்த நாட்களில் அவர்களுடைய பாரம்பரியத்தை பாராமல், தேவனுடைய வார்த்தையை நோக்கி பார்த்திருப்பார்களேயானால், அவர்தான் தேவகுமாரன் என்று அவர்கள் அறிந்திருந்திருப்பார்கள். ஏனெனில் வேதமானது அவருடைய முழு வருகையை குறித்தும் யாவரும் அறியும்படியாக அறிவிக்கிறது. அவர் வார்த்தையின் முழு வெளிப்படுத்தலுடன் வருகிறார். ஒவ்வொரு தலைமுறையும், அந்த நாட்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முழு வெளிப்பாட்டினால் அவரை வெளிப்படுத்துகிறது. இந்த தலைமுறையானது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தியாக வேண்டும். அது வார்த்தையில் வாக்களிக்கப்பட்ட தான அவரை பற்றின வெளிப்பாடு. அது இந்த சந்ததிக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருகால் சபைகள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால், யாராவது எழும்பி அதை செய்வார்கள், ஏனென்றால் யோவான் சொன்னான், “இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண தேவன் வல்லவராயிருக்கிறார். ஆபிரகாம் எங்களுக்கு தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்வராயிருக்கிறார்'' என்று சொன்னான். 8''தேவன் எதை சொன்னாரோ, தேவன் வாக்குதத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் அதை உணர்ந்து, நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்து, தேவனுடைய வாக்குத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமலிருந்தான். ஏனெனில் தேவன் தாமே அந்த வாக்குதத்தத்தை செய்தபடியினால், தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். இந்த நாளுக்கென்று அவர் நமக்கு ஒரு வாக்கு பண்ணியிருக்கிறார். அவர் நமக்கு ஒரு வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். ஆபிரகாமுக்கு அது வெளிப்படுத்தப்பட்டது போன்று, நம்முடைய வாக்குத்தத்தமும் நிச்சயமாக வெளிப்படுத்தப்படும், ஏனென்றால் நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறோம். ''கிறிஸ்துவுக்குள்ளாக நாம் மரித்தபடியினாலே, நாம் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறோம். வாக்குத்தத்ததின்படி அவரோடு கூட உடன் சுதந்தரராயிருக்கிறோம்.'' 9ஆக அநேகர் தங்களுடைய ஆபிப்ராயத்துடன் முழு சுவிசேஷ கூட்டங்களுக்கு அல்லது ஏதாவது கூட்டங்களுக்கு போய் உட்கார்ந்து, அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காரியம் சொல்லப்படுமட்டாக காத்திருந்து, உடனே சில விநாடிகளுக்குள் எழுந்து போய்விடுவார்கள். அதற்கு அடுத்து ஒன்றையும் கேட்பதற்கு அவர்கள் இருக்கமாட்டார்கள் அப்படி இருந்ததா அல்லது அதனுடைய உண்மை என்னவென்று கண்டுக்கொள்ள, அவர்கள் காத்திருக்கமாட்டார்கள். இப்பொழுது ''அது ஆவியா? அது எங்கிருந்து வந்தது?'' என்று நாம் சொல்லுகிறோம். எப்பொழுதும் அப்படி இருக்கிறது. ஆதியாகமம் முதற்கொண்டு அது வருகிறது. வேத வாக்கியங்களினூடாக அது இருக்கின்றது. ஓ! ஒரு நேரத்தில் ஒரு கூட்டஜனத்தண்டை பவுல் பேசிக் கொண்டிருந்தபோது, அவன் நியாயபிரமாணத்தைக் குறித்து பேசும் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவன் வெளிப்பாட்டை குறித்து, பரம தரிசனத்தைக் குறித்து சொல்ல ஆரம்பித்த உடன், உடனே கூட்டத்தாரை அது மாற்றிபோட்டது. அவர்கள் எழும்பி கூச்சலிட ஆரம்பித்தார்கள் அவர்கள் மட்டும் அந்த மனிதன் சொல்லுகின்றதை கேட்பார்களேயானால், அவன் தேவனுடைய சத்தியத்தை வார்த்தையைக் கொண்டு வெளிப்படுத்துகிறான். 10கொஞ்ச காலத்திற்கு முன்னர் இந்த ஐக்கிய நாட்டில், ஒரு பெரிய பட்டணத்தில் என்னை ஒரு எழுப்புதலுக்கு அழைத்தார்கள். அதற்கு வந்தவர்கள் மிகச் சிலரே. ஒருக்கால் அந்த முழு எழுப்புதலுக்கும் வந்தவர்கள், “இன்றிரவு இக்கட்டிடத்திற்குள் இருப்பவர்களை காட்டிலும் அதிகமாக இருக்க முடியாது. சரி. இலவசமான காலை ஆகாரம் கொடுக்கலாம்'' என்று நான் நினைத்தேன். நான் அன்பின் காணிக்கை எடுத்து அங்குள்ள பட்டணத்து சபைகளின் ஐக்கிய (ecumenical) விசுவாசிகளுக்கு காலை ஆகாரத்தை இலவசமாக்க, அவர்களிடத்தில் வெளியே வாருங்கள், நான் அவர்களோடு பேசி, ”இந்த பட்டணத்திற்கு வந்துள்ள என்னுடைய நோக்கம் பட்டணத்திற்கு உதவி செய்யவும், வியாதியஸ்தருக்கு உதவி செய்யவும் அவர்களுக்கும் ஒவ்வொரு சபைக்கும் உதவி செய்யவுமே வந்தேன்'' என்று சொன்னேன். அந்த காலை, என்னுடைய கூட்டத்தின் பேச்சாளியான டாக்டர் லீவைல், காலை ஆகாரத்திற்கு பிறகு குழுமியுள்ளோருக்கு என்னை அறிமுகப்படுத்தினார் நான் அப்பொழுது “பரிம தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை'' என்ற பொருளை பேச தெரிந்து கொண்டேன். ஒரு நொடிபொழுதில் ஒரு ஊழியக்காரன் அவனுடைய கடிகாரத்தை பார்த்துவிட்டு, அடுத்தொருவனிடத்தில் சாய்ந்து தலையை அசைத்துவிட்டு எழும்பி, வெளியே போய்விட்டான். நான் ஆறு அல்லது எட்டு வார்த்தைகள் சொல்வதற்கு முன்னர், சுமார் ஊழியக்கார கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு எழும்பி போய்விட்டார்கள். ''நான் பரம தரிசனத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கவில்லை'' என்று பவுல் சொன்னார், ஏனென்றால் அந்த வேலையைச் செய்யும்படியாய் தேவன் அவனை அழைத்திருந்தார் என்பதை ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள், அவர்கள் என்னுடைய செய்தியின் அடிப்படையை அறிந்து கொண்டார்கள். மூன்றில் ஒரு பங்குக்கு மேலாக அங்கிருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பெயராக சொல்லுகின்ற ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் கூட இல்லை. 11இதை நான் மரியாதையுடன் சொல்லுகிறேன். ஆனால் இது உள்ளுக்குள் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன். அன்று காலையில் சந்தித்த அந்த ஊழியக்காரர் கூட்டத்தை காட்டிலும், ஆப்பிரிக்காவை சேர்ந்த மாந்திரீக வைத்தியர் கூட்டத்திடம் அதிக புரிந்துக் கொள்ளுதலும், மேலான ஒரு ஐக்கியமும் எனக்கு இருந்தது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அதிக சிரத்தை காட்டினார்கள். கேள்விகள் கேட்டார்கள். எனக்குள்ளாக அழுந்தி இருந்ததான நம்பிக்கையை நித்திய ஜீவனின் நம்பிக்கையை என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது. இந்த ஊழியக்காரர்களுக்கு அப்படிப்பட்ட காரியங்களுக்கெல்லாம் நேரமே இல்லை. மிகவும் சீக்கிரமாக, ஏதோ நீ சொன்ன மாத்திரத்தில், எழும்பி போய்விடுவார்கள். அந்த விதமாகதான் அது இருக்கின்றது அவர்கள் தாங்களாகவே அதை குறித்து ஒரு எண்ணத்தை உடையவர்களாய், கொஞ்ச நேரம் அப்படியே இருந்து போய்விட்டார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு அறிய வேண்டியிருந்தது. அவர்கள் விசுவாசிக்கின்ற காரியத்தில் ஒரு வார்த்தை ஒப்புக் கொள்ளக் கூடாமற்போகுமானால், அவர்களால் தரித்திருந்து அதை முழுவதுமாக கேட்க முடியாது. அதே காரணத்தினால்தான் அவர்களால் இயேசு கிறிஸ்துவை அவருடைய முதலாம் வருகையின் போது அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடாமற் போயிற்று, அந்த காரணத்தினால்தான் அவருடைய இரண்டாம் வருகையில் காண தவறிவிடுவார்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் காண தவறிவிடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அப்படிதான். அவர் தம்மை மோசேயில் வெளிப்படுத்தினார். நோவாவில் தம்மை வெளிப்படுத்தினார். எலியாவில் தம்மை வெளிப்படுத்தினார். எல்லா தீர்க்கதரிசிகளிலும் தம்மை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முறையிலும் அவரை அவர்கள் காண தவறி போனார்கள் இன்றைக்கு நீங்கள் அழகுபடுத்துகின்ற அந்த கல்லறைகளில் தீர்க்கதரிசிகளை போடாத உங்கள் பெற்றோர் யாரிருக்கிறார்கள்? அது உண்மை தான். அது எப்பொழுதும் உண்மையாகவே இருந்து வருகிறது. இன்றைக்கும் கூட அது உண்மையாய் இருக்கிறது. இருந்த போதிலும், இவை எல்லாவற்றின் மத்தியிலேயும், நாம் நோக்கி பார்க்கும்படியாய் கட்டளையிடப்பட்டுள்ளோம். பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள். 12சில நேரங்களில் அவர்கள் உள்ளே வருவார்கள். எந்த விதமான ஆடைகள் அணிந்திருக்கிறான் என்பதை பொருத்து அவன் நிதானிக்கப்படுவான். நீங்கள் ஒரு ஊழியக்காரனுக்கான ஆடைகள் போன்றவைகளை அணியாதிருந்தால் அவ்வளவுதான், அவனோடு அவர்கள் எந்தவித காரியமும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் நீங்கள் எப்படிப்பட்ட கல்வியையுடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதை நோக்கி பார்ப்பார்கள். நீங்கள் சரியான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்களா, நீங்கள் சரியான விதமாய் நிற்கிறீர்களா, உங்களுடைய பெயர் சொற்களையும் பிரதிப் பெயர்களையும் எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதை நோக்கிப் பார்ப்பார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால். எனக்கு எது பெயர்ச்சொல் எது (pronoun) பிரதிபெயர் சொல் என்றே எனக்கு தெரியாது. என்னால் சொல்ல முடியாது. ஆக அப்படிப்பட்ட காரியங்களெல்லாம் எனக்குத் தெரியாது. பெயர் சொல்லுக்கும் பிரதி பெயருக்கும் உள்ள (pronoun) வித்தியாசம் எனக்கு தெரியாது. பள்ளியிலிருக்கும் போது அதை செய்தேன். அநேக நாட்களுக்கு முன்பாக நான் அதை மறந்துவிட்டேன். எனக்கு ஒரு காரியம் தெரியும். அது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவை, அவருடைய உயிர்தெழுதலின் வல்லமையில் அறிவேன் எனக்கு தெரிந்ததெல்லாம் அதை குறித்து சொல்வதே. எனக்கு அடைமொழிகள் பிரதி பெயர்கள் அதை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் நினைக்கிறேன் அக்காரணத்தினிமித்தமாக தான் நாம் எல்லாரும் இக்கூட்டத்திற்காக ஒன்றுகூடி வந்திருக்கின்றோம். பெயர் சொற்களை பிரதி பெயர்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. அவரை அறிந்து கொள்ள. ஆனால் அவரை அறிந்து கொள்ள என்று சொல்லும்போது, உயிர்த்தெழுந்த வல்லமையில் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதாகும். 13சில ஜனங்கள் இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது, அவரை காணும்படியாக பார்க்கிறார்கள். அவரை நோக்கி பார்த்து பின்பு அவரை காணுகிறார்கள். அவருக்குள் ஒரு சபை ஸ்தாபகரை காணுகிறார்கள், சபையை நடத்துகிறவராக காணுகிறார்கள், ஒரு சபைக்கு ஒரு கொள்கையாய் அவரை காணுகிறார்கள். அதற்காக தான் அநேக ஜனங்கள் அவரை காணும்படியாக. இயேசுவை நோக்கிப் பார்க்கிறார்கள். ஒரு சபை கோட்பாட்டுடன், கூட்டி சேர்த்துக் கொள்ளத் தக்கதான ஒரு புது கொள்கையாய் அவர் இருக்கிறார். அநேக ஜனங்கள் அவரை நோக்கிப் பார்த்து, அவரை அந்த விதமாக காணுகிறார்கள். சிலர் அவரை நோக்கிப் பார்த்து, காலங்களாய் சொல்லப்பட்டு வருகின்ற ஒன்றாய், சான்டா கிளாஸாய் (santa claus) அவரை காணுகிறார்கள். அல்லது சிலர் அவரை நோக்கிப் பார்த்து, அநேக வருஷங்களுக்கு முன்பாக தேவன் செய்த ஒரு சரித்திர பிரகாரமான கிரியையாய் அவரை காணுகிறார்கள். அவர்களில் சிலர் இன்னமும் அவரை முன்னணையில் உள்ள ஒரு பாலகனாய் காணுகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், நீங்கள் அவரை நோக்கி பார்க்கும் போது நீங்கள் என்ன காணுகின்றீர்கள்? திரித்துவத்தில் இரண்டாவது நபரை காணுகின்றீர்களா அல்லது ஒன்றில் மூன்றான திரித்துவத்தை காணுகின்றீர்களா? வார்தையின் மூலமாக நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும்போது மட்டுமே, உங்களால் அவரை காண முடியும். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். அது அவரைத் தான் வெளிப்படுத்தும். அது நீங்கள் எனனத்திற்காக நோக்கி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கின்றது. நீங்கள் விவாதிப்பதற்காக அவரை நோக்கிப் பார்ப்பீர்களானால், அது நீங்கள் தவறாய் பார்க்கின்றதாகும். அவர் விவாதிக்கவில்லை. விவாதிப்பது அவருக்கு ஏற்றதல்ல. நினைவிருக்கட்டும், நீங்கள் அவரை வார்த்தையினூடாக காணும்போது, அவரை காணுகிறீர்கள். அவரை அடையாளங் கண்டு கொள்கிறீர்கள். உண்மைக்கு உங்கள் கண்கள் திறக்கப்படுமட்டாக உங்களால் இப்பொழுது அவரை காணமுடியாது. இரண்டு பேர் ஒரே வேத வார்த்தைகளை நோக்கி பார்த்து ஒப்பிபோகாமலிருக்கலாம். அவர்களில் ஒருவர் சரியாயிருக்க வேண்டும் ஒன்று தவறானதாயிருக்க வேண்டும். 14சில சமயங்களில், நம்மை சுற்றி காரியங்கள் சம்பவிக்கின்றன; அவர்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் நாங்கள் காணுகிறோம் என்று சொல்லுகிறார்கள், மற்றவர்கள் அதை குறித்து ஒன்றையுங் காண்கிறதில்லை. எலியாவை சுற்றி சீரிய படையானது வளைத்துக் கொண்ட போது அங்கே தோத்தானை பாருங்கள். அவனோடு ஜீனித்தவன், அவன் கூப்பிடுதலுக்கு காத்திருந்தவன், அவனுக்காக சமைத்தவன், அவனுடைய ஆடைகளை சுத்தமாக்கி வைத்துக் கொண்டவன், அவனுடைய கைகளுக்கு தண்ணீர் ஊற்றியவன், அவனோடு கூடவே இருந்தவன், இரவு பகலாய்; அவன் போதிக்கவும் பிரசங்கிக்கவும் அதற்கு செவி கொடுத்தவன், அவனுடைய உண்மையுள்ள வேலைக்காரன் கேயாசி, அன்று காலையில் அவன் விழித்தெழுந்தபோது அவன் வெளியே நோக்கிப் பார்த்தான். சீரிய படை சுற்றிலும் சூழ்ந்திருப்பதை கண்டான். அவன், ''என் தகப்பனே, ஐயோ, நமக்கு உண்டாயிருக்கின்ற எதிர்ப்பை, முழு சீரிய படையும் பாருங்கள்'' என்றான் பாருங்கள், எலியா விழுத்தெழும்பி நோக்கி பார்த்த போது, கேயாசி காணாத ஒன்றை அவன் கண்டான். ஆகவே அவன், “கர்த்தாவே இந்த வாலிபனின் கண்களை திறவும்'' என்று ஜெபித்தான். இப்பொழுது அவன் கண்கள் விரிவாய் திறந்துதான் இருந்தது. ஆனாலும் அவன் சொன்னான். ”அவன் காணும்படியாய் அவன் கண்களை திறவும்'' என்று சொன்னான். அவனுடைய கண்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் திறக்கப்பட்டபோது அந்த தீர்க்கதரிசியை சுற்றிலுமுள்ள மலைகள் யாவும் அக்கினிமயமான இரதங்களாலும் தூதர்களாலும் சூழ்ந்திருந்தது, புரிகின்றதா, அவனுடைய கண்கள் திறக்கப்பட்டபோது அவை வித்தியாசமாயிருந்தது 15இப்பொழுது, எழுத்தின்படியாக ஜனங்கள் வார்த்தையை நோக்கி பார்க்கிறார்கள். அந்த விதமாகவே தான் நீங்கள் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஆனால், அதுவோ ஆவிக்குரிய பிரகாரமாயும் எழுத்தின் படியாயும் தன்னை அறிவிக்கின்றது. ஆவியானது, வார்த்தையை வாக்குதத்தத்தின்படியாய் ஜீவிக்க வைக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அது ஒரு வித்தாய் இருக்கின்றது. அதனுடைய ஜீவனை ஆவியானது கொடுக்கின்றது. ஒருவித ஆர்வத்தை தூண்டுகின்றது. அதனுடைய புறப்படுதலை அது கொடுக்கின்றது. பூமிக்குள்ளாய் புதைந்து கிடக்கின்ற வித்திற்கு மழையானது வளர்ச்சியை துவக்கி வைப்பது போன்று. அது உடைத்துக் கொண்டு ஜீவன் வெளி வருகின்றது. இயேசுவை, இந்த மணிவேளையின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாய் நீ நோக்கி பார்க்கும்போது, அப்பொழுது அது உனக்கு வெளிப்படுத்தப்படும். நீ அவரை நோக்கி பார்க்கும் போது நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர், அதே கிறிஸ்துதான் அவர் என்று நீ காண்பாய். 16ஆதியாகமம் துவங்கி, ஒவ்வொரு தலைமுறைக்கென்றும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியானது சரியானபடியாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தேவன், எப்பொழுதும் யாரையாவது அனுப்புகிறார். வழக்கமாக பிரசங்கிமார்கள் அதை அவ்வளவாய் அது ஒரு பாரம்பரியமாக ஆகுமட்டாய் குழப்பிவிடுகிறார்கள். இயேசுவின் வருகையில் அது இருந்தது போன்று. பின்பு தேவன் தொடர்ந்து ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார். ''தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறது'' அவன் அதை வெளிப்படுத்துகிறான், கல்லெறிந்து கொல்லப்பட்டாலும், புறம்பே தள்ளப்பட்டாலும், வெளியே உதைத்து தள்ளப்பட்டாலும், அவன் போய் கொஞ்ச காலம் கழித்து, அவனுக்கு கல்லறையைக் கட்டி, அவன் ஒரு பெரிய மனிதன் என்று சொல்வார்கள். அவனை அன்றைக்கு ஜீவித்த நிழலில் இவர்கள் ஜீவித்துக் கொண்டு, இன்றைக்கு நடந்தேறி கொண்டிருக்கின்றதான வார்த்தையை மறுக்கிறார்கள். அது வெறுமனே ஒரு மனிதனை போன்று. அவன் எப்பொழுதும் தேவன் எவ்வளவு பெரியவரென்றும், அவர் என்ன செய்திருக்கிறார் என்றும், எப்படி என்ன காரியங்கள் அவர் செய்யப் போகிறாரென்றும் பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவர் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கின்ற காரியங்களை காண முடியாதவர்களாயும் இருக்கிறார்கள். புரிகின்றதா? அவன் அவரை சரித்திரத்தில் பார்க்கிறான், தீர்க்கதரிசனத்தில் அவரை பார்க்கிறான். ஆனால் அன்றைக்கு அவர் செய்தது போன்றே, இன்றைக்கும் அதே காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறான். அதை அவர் ஒரு மனிதனில் தான் செய்கிறார். 17ஒரு நேரத்தில் நாம் சீஷர்களை பார்த்தோம், அது உயிர்த்தெழுந்த முதல் நாள் காலையில், என்னே ஒரு காலை! இயேசு, மரித்தோரிலிருந்து எழும்பி, பூக்களின் மத்தியில் நடக்கிறார், இரண்டு நண்பர்கள், கிளியோப்பாவும் அவனுடைய நண்பர்களில் ஒருவனும், எம்மாவுக்கு போகிற வழியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தில் வருத்தப்பட்டவர்களாய் பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதன் புதர்களிலிருந்து வெளியே வந்து, அந்த நாளெல்லாம் அவர்களோடு கூட நடந்து, கிறிஸ்துவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நாள் மாலையில் அவரை கேட்டார்கள் அவரோ அவர்களை விட்டு கடந்து போகிறவர் போன்று நடித்தார். ஆனால் அவர்களோ அவரை உள்ளே வரும்படியாய் அழைத்தார்கள். அவர் போனார். அப்படி அவர் உள்ளே போனபோது. அவருடைய சிலுவை மரணத்திற்கு முன்பு அவர் செய்த மாதிரியின்படியே அவர் எதோ காரியத்தை செய்தார். அவர் அங்கே செய்தது போன்றே அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் செய்ததை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்தான் என்று அவர்கள் அடையாளங் கண்டு கொண்டார்கள். அந்த நாள் முழுவதுமாய் அவர்களோடு இருந்தும், அவர் யாரென்று அவர்களால் அடையாளங்கண்டு கொள்ள முடியவில்லை. 18இன்றைக்கும், நல்ல மனிதன் அருமையான மனிதன், கிறிஸ்துவோடு கூட நடந்து கொண்டு அவருடைய வார்த்தையை வாசித்துக் கொண்டும், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற குறிப்பிட்ட காரியங்கள் நிறைவேற வேண்டிய நாட்கள் இதுதான் என்று இன்னமும் அறிந்துக் கொள்ள கூடாதவர்களாய் இருப்பதும், நடக்கக் கூடியதே, இந்த காரியங்களெல்லாம் நிறைவேற வேண்டியிருக்கின்ற சமயம் சமீபமாயிருக்கின்ற தான மணி நேரத்தில் தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். அது எழுதப்பட்டிருக்கின்றது. அந்த, வண்ணமாகவே அது நிறைவேற வேண்டியதாயிருக்கிறது, ஏனென்றால் தேவன் அதை வாக்கு பண்ணியிருக்கிறார். ஆம், வார்த்தையை பார்க்கும் படியாக நமது கண்கள் திறக்கப்பட வேண்டும். உங்களால் இப்பொழுது பார்க்கக் கூடும். மேசியா வரவேண்டிய விதமாகவே, பரிசேயர்கள் சரியாக வார்த்தையை உடையவர்களாய், அறிந்திருந்தார்கள். அவர்கள் சரிதான் என்று நம்பி இருந்தார்கள். அவர் இங்கே பிறந்து, நேராக அவர்கள் மத்தியில் நடந்து, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளில் நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் நினைக்கிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்று அவர் சொன்ன போது அவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ''வேத வார்த்தைகளை ஆராய்ந்து பாருங்கள்'', என்றார். அவர்கள் ''நாங்கள் மோசேயின் சீஷர்கள்'' என்றார்கள். ''நீங்கள் மோசேயின் சீஷர்களாய் இருப்பீர்களானால் நீங்கள் என்னை அறிந்திருப்பீர்கள், ஏனெனில், மோசே என்னைக் குறித்து எழுதி இருக்கிறான்'' என்று சொன்னார் அவர். அவன் அப்படிச் செய்தான். “தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற நியாய பிரமாணிகன் தீர்க்கதரிசி; இன்றுமாய் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார். அவருக்கு ஜனங்கள் செவி கொடுப்பார்கள்'' என்று மோசே சொன்னான். பாருங்கள், அவர்கள் மோசே எழுதினவைகளை அறிந்திருப்பார்களேயானால், அவரை அவர்கள் அறிந்திருப்பார்கள் அவர்கள் மோசே எழுதியிருக்கிறவைகளை தாங்கள் அறிந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், பாருங்கள், அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை, புரிகின்றதா? அந்த உண்மைக்கு அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தார்கள். அதைப் போன்று, ஒரு சில வார்த்தைகளை அவனிடத்திலிருந்து அவரைப் பற்றி பெற்றிருந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? படாரென்று எழும்பி நின்று, “இவனிடம் பிசாசு இருக்கின்றது. எங்களுக்கா போதிக்க வந்தாய்? நீ எந்த பள்ளியிலிருந்து வந்தாய்? அவனைக் குறித்து எந்த தஸ்தாவேஜுகளும் எங்களிடம் இல்லை. அவன் யாருடைய ஐக்கியச் சீட்டை வைத்திருக்கின்றானோ என்று ஆச்சரிப்படுகிறோம்?” அல்லது அந்த விதமாகத்தான் ஏதோ கேள்வி எழும்பி இருக்கும்! 19ஆனால், வார்த்தையை வாக்குத்தத்தமாய் தந்த அதே தேவன், இயேசு கிறிஸ்து என்ற நபரிலே நேரடியாக ரூபகாரப்படுத்திக் கொண்டு போகின்றதை, அவர்கள் நோக்கிப் பார்த்து காணத் தவறிப் போனார்கள். ஏனென்றால், அவரே அந்த வேளையின் ஒளியாயிருந்தார். ஜனங்கள் நடந்து உள் பிரவேசிக்கும்படியாய் அவரே அந்த ஒளியாய் இருந்தார். தேவனுடைய வார்த்தை மட்டுமே வெளிச்சத்தை உண்டு பண்ணும். தேவனுடைய வார்த்தை மட்டுமே வெளிச்சத்தை உண்டு பண்ணும். தேவனுடைய வார்த்தை சூரிய வெளிச்சத்தை உண்டு பண்ணிற்று. தேவனுடைய வார்த்தை பூமியை உண்டு பண்ணிற்று தேவனுடைய வார்த்தை காற்றை உண்டு பண்ணிற்று. உண்மைப் பொருளை உடைய ஒவ்வொன்றும், எல்லாக் காரியங்களும், தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுதலாயிருக்கிறது.. அவர் இங்கே இருந்தபோது “நான் தேவனாய் இருக்கிறேன், என்னையன்றி வேறு ஒருவருமிலை” என்று சொன்னார். சிலர் நோக்கினார்கள். சிலர் நோக்கிப் பார்த்தார்கள் என்று எடுத்துக் கொள்வோம். 20ஒரு நேரத்தில் ஏசாயா, ஒரு வாலிப தீர்க்கதரிசி... இங்கே கடந்த முறை பீனிக்ஸில் (phoenix) அவனைக் குறித்து நான் பேசினேன், வர்த்தகர்கள் கூட்டத்தில், என்று நம்புகிறேன். எப்படி அவன் அதிகமாய் உசியா இராஜாவின் தோள்களில் சார்ந்தவனாய் இருந்தானென்று, உசியா மிகவும் பெருமிதங்கொண்டு, அதனால் குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டான் என்று நாம் பார்த்தோம். பின்பு ஏசாயா ஆலயத்திற்குப் போய் ஜெபித்து தான் ஒரு பாதியென்று அறிக்கை பண்ண வேண்டியவனாயிருந்தான். கேராபீன்கள் வருவதையும், அவர்களுடைய பரிசுத்த முகங்களையும், கால்களையும் செட்டைகளால் மூடிக்கொண்டு இரண்டு செட்டைகளால் பறந்துகொண்டு “தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்” என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். ஏசாயா இயேசு கிறிஸ்துவைச் சற்று பார்க்க நேர்ந்தது, இதோ அவன் கண்டது. அவன் ஏதோ ஒரு சாதாரண மனிதனைக் காணவில்லை. அவன் ஏதோ ஒரு தத்துவ ஞானியைக் காணவில்லை. 21ஒரு பரிசீலனை (survey) செய்த போது, நான் நினைக்கிறேன் சற்றேரக்குறைய 68 அல்லது 86 சதவீதம், பிரோடெஸ்டென்ட் சபைகள் இன்றைக்கு , விசுவாசிப்பதை மறுக்கிறார்கள். அவர்கள், நம்முடைய பிரோடெஸ்டென்ட் பிரசங்கிமார்கள், இயேசு கிறிஸ்துவின் கன்னி பிறப்பை மறுதலிக்கிறார்கள். அது சரி. இது கணக்கின்படியாக இருக்கிறது. அவர்கள் யாவருமாக கன்னி பிறப்பை மறுதலிக்கிறார்கள். உண்மையாகவே அது ஒரு கன்னிதான் அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. ஆகவே ஏசாயா அப்படியொன்றையும் காணவில்லை. அவர்களில் சிலர் சொல்லுகிறார்கள், “அவர் ஒரு நல்ல மனிதன்” என்று. அவர்களில் சிலர் இன்றைக்கு நம்முடைய ஸ்தாபனங்களில் சிலர் கூறுகின்றது போன்று, “அவர் ஒரு நல்ல மனிதன், நிச்சயமாக அவரில் எந்த விதமான குற்றமுமில்லை. ஆனால் நான் சொல்லுகிறேன் அவருடைய வார்த்தைகள் நிரூபிக்கப்படவோ அல்லது இன்றைக்கு விசுவாசிக்கப்படவோ முடியாததாயிருக்கிறது” என்று சொல்லுகிறார்கள். 22தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பாக நிரூபிக்கப்படுகின்ற எந்த விகவாசத்தையும் நம்பிக்கையையும் அப்படியே விட்டுவிடுங்கள். ''எல்லா மனுஷருடைய வார்ததையும் தவறிப்போகும், ஆனால் என்னுடையதோ தவறாது. வானமும், பூமியும் ஒழிந்துபோம். ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போகாது“, என்று இயேசு சொன்னார். ஆக, எந்த கோட்பாடாயினும் அல்லது எந்த காரியமாயினும், இந்த தேவனுடைய வார்த்தையின் மீது எல்லா தேவனுடைய வார்த்தையின் மீதும் கட்டப்பட்டிருக்க வேண்டும்! ”மனுஷன் அப்பத்தினாலேயே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“ என்று இயேசு சொன்னார். இங்கே ஏதோ ஒரு வார்த்தை அங்கே ஏதோ ஒரு வார்த்தை என்றல்ல, இங்கே ஒரு சிறு காரியம் அங்கே ஒரு சிறு காரியம். அவைகளை ஒன்றாய் இணைப்பது அல்ல. ஆனால், ”தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிழைப்பான்“. மனிதன் வேதத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் எடுத்துக் கொள்வான்! அவைகளை ஒன்றாய்ச் சேர்ப்பான், அவைகள் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறது, அதை வெறுமனே வாசித்து அப்படியே விசுவாசி. அதன்படி கிரியை செய். தேவன் அதை கனப்படுத்துவார். ஏசாயா இங்கே நோக்கிப் பார்த்தான் என்று நாம் பார்த்தோம் ஏசாயா, நீ என்ன கண்டாய்? அவன், “ஆலோசனை கர்த்தர், சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா' என்று அழைக்கப்படுபவரைக் கண்டான். அதைத்தான் அவன் நோக்கிப் பார்த்தான். 23நான் இன்னொரு மனிதனை அழைப்பேனேயானால் தானியேலே ஒரு நேரம் அவரை கானும்படியான சந்தர்ப்பம் உனக்கு கிடைத்தது. ஒரு பெரிய தீர்க்கதரிசியே நீ என்ன கண்டாய்? “ஒரு கல்லைப் பார்த்தேன், மனிதரின் கைகளால் பெயர்க்கப்படாத அந்தக் கல் ஒரு மலையிலிருந்து வெட்டப்பட்டு, இந்த உலகத்தின் இராஜியங்களின் மீது உருண்டு வந்து விழுந்து, அவைகளைப் பொடிப் பொடியாக உடைத்துப் போட்டு அவைகள் கோடை காலத்தின் போரடிக்கும் களத்தின் பதரைப் போன்று பறந்து போயிற்று. அந்த கல்லோ ஒரு பெரிய பர்வதமாக வளர்ந்து பூமியை மூடிற்று” என்று சொன்னான். அவரைக் குறித்து அவன் அதைத்தான் சொன்னான். ஆதலால், ஒரு நாளில் அவர் உலகத்தை அரசாளுவார். இன்றைக்கு ஜனங்கள் ஒரு உலக ஆட்சியாளனுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேசமும் அவர்களுடைய மொழியே வேண்டும், அவர்களுடைய கருத்துக்களே வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்களுடையது மற்றவைகளுக்கு மேலாக இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அங்கே ஒன்று வந்து கொண்டிருக்கின்றது, அது இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது. அவரே உலகத்தை ஆளுபவர், தேவன்தாமே அன்றி வேறு யாருமில்லை 24ஒரு நாள் நேபுகாத் நேச்சார் ஒரு பொல்லாத காரியத்தை செய்தான். விசுவாசிக்கின்ற மூன்று பிள்ளைகளை அக்கினி சூளையில் தூக்கி எறிந்தான். அதற்குள்ளாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூறும்படியாக அதன் கதவைத் திறந்தபோது, அக்கினிச் சூளைக்குள்ளாக ஒரு நான்காவது ஆள் இருப்பதை அவன் கண்டான் நேபுகாத்நேச்சாரே, நீ நோக்கிப் பார்த்தபோது என்ன கண்டாய்? “அவர் தேவ குமாரனைப் போன்று காணப்பட்டார்” என்று அவன் சொன்னான். அவன் தான் செய்த தவறுக்குள்ளாக நோக்கிப் பார்த்தபோது, அவன் அதைத்தான் கண்டான். தேவ குமாரனைப் போன்ற ஒருவர் அங்கு இருக்கக் கண்டான். ஒரு நாள் எசேக்கியேல் நோக்கிப் பார்த்து, ''நானுங் கூட அவரைக் கண்டேன். அவர் சக்கரத்திற்குள் சக்கரமாய், நடு ஆகாயத்தில் ஓடிக் கொண்டிருந்தார்“ என்று சொன்னான். அதைப் போன்று தான் அவர் எசேக்கியேலுக்கு காணப்பட்டார் - 25தீர்க்கதரிசிகள் எல்லாரிலும் பெரியவனான யோவான், இயேசுவை அறிமுகப்படுத்தியவன் அவன் தான் “ஸ்தரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவானைக் காட்டிலும் பெரியவன் இல்லை” என்று இயேசு சொன்னார். அது ஏன் அப்படி என்று நீங்கள் எப்பொழுதாகிலும் சிந்தித்ததுண்டா? மற்றவர்கள் யாவரும் அவரைக் குறித்துப் பேசினார்கள். “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வரும்”! அது அப்படி என்று வேதம் சொல்லுகின்றது. மற்ற தீர்க்கதரிசிகள் எல்லாரிடத்தும் அது தரிசனமாய் அவர்களிடத்தில் வந்தது, ஆனால் வார்த்தையானது யோவானிடத்திற்கு வந்த போது, அது மாம்சமாயிருந்தது. இயேசு வார்த்தையாய் இருந்தார். இயேசு வார்த்தையாய் இருக்கிறார். அவர் எப்பொழுதும் வார்த்தையாய் இருந்தார். ஆனால் இங்கே தான் அவர். தெய்வத்தின் பரிபூரணமாயிருந்தார். “மாம்சமாகி, நமது மத்தியில் வாசம் பணணினார்”. அவர் அவனிடத்தில், தண்ணீரண்டை வந்தபோது, அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார். வார்த்தையானது, மாம்சமாக்கபட்டதானால், அது ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்குத் தான் வர வேண்டும். வார்த்தையானது, அது எந்த இடத்தில் இருந்தாலும், அது ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்குத் தான் வரவேண்டும். ஏனென்றால், தீர்க்கதரிசியனாகிய ஒருவனிடத்திற்கு தான் வார்த்தையானது வரும். யோவான் அந்த நாளின் தீர்க்கதரிசியாயிருந்தான். 26வார்த்தையானது அவனிடத்தில் வந்தபோது, தண்ணீரில் நடந்து அவனண்டை வந்த போது, “தான் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றது. யோவான்அதற்கு, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா” என்று சொன்னான். அவர் அதற்கு, “இப்பொழுது இடங்கொடு இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது”, என்றார். யோவான் ஏன் அப்படி சொன்னான் என்று நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? யோவான் ஏன் அதை இயேசுவினிடத்தில் சொன்னான்? அவர்களுக்கு அது ஏற்றதாயிருந்தது. அங்கே தீர்க்கதரிசியும் வார்த்தையும் இருந்தது, வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்தது. இப்பொழுது எல்லா நீதியையும் நிறைவேற்றுவது அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது. என்ன சம்பவித்தது? பின்பு யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் ஏனென்றால், யோவான் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியினால், வார்த்தையை அறிந்திருந்தபடியினால், பலி பொருளானது அர்ப்பணிக்கப்படு முன்னர் கழுவப்பட வேண்டும். அதனிமித்தமாகவே யோவான் இயேசுவானவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். யோவான் நோக்கி பார்த்து கண்டான்... இதுதான் இயேசு என்று அவன் எப்படி அறிந்து கொண்டான்? பரிசுத்தாவியினால் அவனுக்குச் சொல்லப்பட்டிருந்ததான ஒரு புறாவை அவன் கண்டான். ''ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் ஞானஸ்நானங் கொடுக்கிறவர்.'' 27நோவா நோப்கிப் பார்த்தான். நோவா என்னும் பேர் கொண்ட இன்னொரு மனிதன் நோக்கிப் பார்த்தான் என்று நாம் இங்கே கண்டோம். அவன் நோக்கிப் பார்த்து, தேவனுடைய நியாயத் தீர்ப்பானது, ஒரு பொல்லாத, வார்த்தையை மறுக்கின்ற சந்ததியாரின் மீது ஊற்றப்படுவதைக் கண்டான், நோவா ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியினால், அவனுடைய தரிசனத்தில், பேழையை எப்படி கட்ட வேண்டும் என்று தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை கொடுத்து அதை உண்டு பண்ணும்படியான முறைமைகளை, எப்படி கட்டப்பட வேண்டும் என்று அவனுக்கு உத்தரவிட்டார். இதில், இந்த தரிசனம் தேவனுடைய வார்த்தையாய் இல்லாதிருக்குமாயின், இந்த கோபாக்கினையை அவன் கண்டு எப்படி நோவா ஆயத்தத்திற்கான வழியை உண்டு பண்ணியிருப்பான்? எப்பொழுதும், நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்னர், ஒரு ஆயத்தப்படுத்துதல் அங்கே உண்டாயிருக்கும். அது எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அவன் கண்ட தரிசனம் உண்மையென்றும், அதில் அவனுக்கு விசுவாசம் உண்டென்பதற்கும் சாட்சி சொல்லுகிறதாய், அவன் தேவனுடைய வார்த்தையை ஒன்றுபடுத்தி கட்டிக் கொண்டிருந்த போது பரியாசக்காரர் வந்து, பரிகசித்தார்கள். ஆனால் நோவா இன்னும் தூரமாய் நோக்கி பார்த்து, தேவனுடைய நீதியானது இந்த ஜனத்தின் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரவேண்டிய அவசியத்தைக் கண்டு, அவனுடைய சொந்த வீட்டாரை இரட்சிக்கும்படியாக ஒரு பேழையைக் கட்டினான். அவன் நோக்கி பார்த்தபோது. வருகின்றதான தேவனுடைய கோபாக்கினையை கண்டான். இந்த காரியத்திலிருந்து ஜனங்கள் தப்பிக் கொள்ளும்படியான, ஒரு ஆயத்தத்தத்தை அவன் உண்டு பண்ணினான். யோவான் ஸ்நானகனும் அதையே செய்தான். தப்பிக் கொள்வதற்கான ஆயத்தத்தை உண்டு பண்ணினான். இன்றைக்கு பரிசுத்தாவியானவரும் அதையே செய்து கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்கு முன்னோடிக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை கட்டிக்கொண்டிருக்கிறார். நாம் அதற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்; அந்த கட்டடம் நியாயத் தீர்ப்பில் நிற்கும், ஏனென்றால் ஏற்கெனவே அது நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. “நான் இரத்தத்தைக் காணும் போது கடந்து போவேன்” ஆம். நோவா, நோக்கி பார்த்தான். என்ன வந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கண்டான், 28மோசே நோக்கிப் பார்த்தான். ஒரு நாள் அவன் அக்னி ஸ்தம்பத்தைக் கண்டான். அது அவனுடையகவனத்தை வசீகரித்தது. இந்த பெரிய வேத சாஸ்திரி, அவனுக்கிருந்த எல்லா வேத பயிற்சியோடும், தேவனுடைய வார்த்தையில் (அவனுடைய தாயின் மூலமாக) அவனுக்கிருந்த அறிவோடும், எப்படி அவன் இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க வேண்டுமென்ற அறிந்து கொள்ளுதலோடும், அவன் ஓடிப் போனான். ஆனால் அவன் தன் சொத்த வழியில் முயற்சித்த போது, அவன் தவறினான். அவன் என்ன செய்ய வேண்டுமென்றும், அவன் என்ன செய்வான் என்றும், தேவன் எதற்காக அவனை எழுப்பினார் என்றும், அவனுடைய தாய் முற்றிலுமாய் அவனுக்கு போதித்திருந்தும், அவன் தவறினான். அவனுடைய எல்லா ஞானமும் எவ்வளவு நல்லதாய் இருந்தாலும், நல்லதாய்த் தான் இருந்தது ஆனாலும் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அது வெறுமனே இயங்கு சாதனமாயிருந்தது ஒரு மோட்டார் வண்டியை ஓட வைப்பது இயங்கு சாதனமல்ல. இயக்கு சக்தியே அதை ஓட வைக்கிறது. சபையை இயங்க வைக்கிறது இயங்கு சாதனமல்ல, இயங்கு சக்தியே, வார்த்தைக்குள்ளாகப் போகின்ற பரிசுத்தாவியானவரே. எல்லா வேத சாஸ்திரத்தையும், கிரேக்க வியாக்கியானத்தையும், படிப்பிக்கின்ற குருமார் பாடசாலை அல்ல அது. ஆனால் அதற்கு அனல் மூட்டி எரியச் செய்ய, அதை நிறைவேறுதலுக்குக் கொண்டு வர, இந்த மணி வேளைக்கென்று வாக்குப் பண்ணப்பட்ட வார்த்தையின் படியே, அப்படியே ஜீவிக்கச் செய்கின்ற, உள்ளே இருக்கின்றதான பரிசுத்த ஆவியின் இயங்கு சக்தியே அது. இயங்கு சாதனமல்ல, இயங்கு சக்தியே! அது இயங்கு சாதனம், இயங்கு சக்தி இரண்டையும் எடுத்துக் கொள்ளுகிறது. வார்த்தையும், ஆவியும், ஜீவனை கொடுக்கிறவைகள் அவைகளே. 29தேவன் இந்த மணி வேளைக்கு என்ன வாக்குப் பண்ணியிருக்கிறாறோ அது நிறைவேறும்படியாய் நோக்கிப் பாருங்கள். நீங்கள் அவரிடத்தில் நோக்கிப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அவரே வார்த்தையாயிருக்கிறார், நீங்கள் வார்த்தையை நோக்கிப் பார்க்கத் தக்கதான ஒரே ஒரு வழி, நீங்கள் அவரிடத்தில் நோக்கிப் பார்ப்பதே அவரிடத்தில் நோக்கப் பாருங்கள். அவரே வார்த்தையாயிருக்கிறார். இந்த நாளுக்கென்று வாக்கு பண்ணப்பட்ட வார்த்தையானது, இந்த நாளிலே நிறைவேற்றப்பட வேண்டும். நோவாவின் நேரம் இந்நாட்களில் நிரப்பப்பட முடியாது அது வெறுமனே ஒரு பாவனையே, மோசேயின் நேரம் இன்னும் இப்படியாய். ஆனால் இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காரியங்கள், நாம் காண்கின்றதான இந்த காரியங்கள், இவைகளை இந்த நாளுக்குத்தான் தேவன் அதை வாக்குப் பண்ணியிருக்கிறார். பாவிகளின் இருதயத்தை மாற்றக் கூடியதும், ஒரு வெது வெதுப்பான சபை விசுவாசியை எடுத்து அவன் வெளியேறி வந்ததான ஒரு சபையைக் கொளுத்தத் தக்கதான சாட்சியை கொடுக்கக் கூடியதுமான; பரிசுக்தாவியானவரின் பெரிய முக்கியமான வல்லமையுமான இதைப் பார்த்து தான் உலகம் இன்று சிரிக்கின்றது. வார்த்தைக்குள்ளாகச் சென்ற இயங்குசக்தியே அது. 30-நான் அடிக்கடி சொன்னது போன்று, இரண்டு வகையான ஜனங்களை நான் பார்க்கிறேன். அவர்களில் ஒரு சாரார் அடிப்படை தத்துவத்தார். வேத வார்த்தைகளினாலே கிறிஸ்துவுக்குள் அவர்கள் எந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற காரியங்களில் எந்த விசுவாசமும் இல்லாதவர்கள். அவன் பரிசுத்தாவியைப் பெறவில்லை. பின்பு நான் பெந்தேகோஸ்துகளைப் பார்த்தபோது, அவர்களில் அநேகர் பரிசுத்தாவியைப் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரென்று அறியாதிருந்தார்கள், வங்கியில் பணம் வைத்துக் கொண்டு காசோலை எழுத தெரியாதவனும், இன்னொருவனுக்கு காசோலை எழுத தெரிந்து ஆனால் வங்கியில் பணம் ஏதும் இல்லாததுமான மனிதனைப் போன்று. உன்னால் மட்டும் அவர்கள் இருவரையும் ஒன்றுபடுத்தக் கூடுமானால், உங்களால் மட்டும் பெந்தேகோஸ்துகளை அவர்கள் யாரென்று உணர்த்தி உண்மையான, தேவனுடைய முழு வார்த்தைக்கு, பரிசுத்தாவியின் அபிஷேகத்தோடு கூட கொண்டு வரக் கூடுமானால், அது ஒரு புதிய பெந்தேகோஸ்தே எழுப்புதலுக்கு, உலகத்தை கொளுத்திவிடும்; சகோதரனே சகோதரியே அது உண்மை. ''பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் நானே தேவன் வேறொருவரும் இல்லை.'' ஓ! நம்மால் கம்யூனிஸத்தை நிதானிக்க முடியும். நம்மால் மற்றெல்லாக் காரியத்தையும் நிதானிக்க முடியும். ஆனால் இந்த நாளுக்கென்று தேவனால் பகிர்ந்தளிக்கப்பட்ட வார்த்தையை நம்மால் நிதானிக்கக் கூடுமா என்று ஆச்சரியப்படுகிறேன்? இந்த நாளில் பூமியில் இருக்கும் என்று தேவன் நமக்குச் சொன்ன அடையாளத்தை நம்மால் நிதானிக்கக் கூடுமா என்று ஆச்சரியப்படுகிறேன்? நாம் அதைச் செய்வோமா என்று ஆச்சரியப்படுகிறேன்? 31ஆம், திரும்பவுமாக மோசேயை பார்ப்போம். அதைக் குறித்தான எல்லா இயங்கு சாதனத்தைவும் உடையவனாயிருந்தான். ஆனால் ஒரு நாள் எரியும் புதரில் ஒரு மனிதன், ஒரு மனித குரலினால் பேசும் சத்தத்தைக் கேட்டான். புதரில் எரிந்து கொண்டிருக்கின்ற அக்னிஸ்தம்பம், மனித குரலிலே பேசி, ''நான் இருக்கிறவராகவே இருக்கிறேன். என்னுடைய ஜனங்களின் குமுரலை நான் கேட்டேன். என்னுடைய வார்த்தையை நான் நினைவு கூர்ந்தேன். நான் அவர்களை மீட்கும்படியாய் இறங்கி வந்தேன். அதைச் செய்யும்படியாய் நான் உன்னை அனுப்புகிறேன்'' என்று சொன்னார். அவன் அதை பெற்றவுடனே என்ன ஒரு வித்தியாசமான மனிதனாயிருந்தான். அவனிடத்தில் இயங்கு சாதனமிருந்தது. ஆனால் அதற்குள் அவனிடம் இயங்கு சக்தியும் இருந்தது, ''நிச்சயமாகவே நான் உன்னோடு கூட இருப்பேன்'', மோசே போவதற்கு எடுத்துக் கொண்டதெல்லாம் அது தான். அவன் நோக்கிப் பார்த்து எரிகின்ற புதரைக் கண்டான். 32பயணத்தில் பிற்பகுதியில், இஸ்ரவேல் வெளியே வந்த போது, அவர்களும் கூட நோக்கிப் பார்த்தார்கள் என்று நாம் கண்டோம். அவர்கள் ஒரு வெண்கலச் சர்ப்பத்தைக் கண்டார்கள். இந்த வெண்கல சர்ப்பமானது அவர்களுடைய வியாதியினிமித்தமாக உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பாவம் செய்து ஒரு வெண்கலச் சர்ப்பத்தை கண்டார்கள். அவர்கள் கண்ட அந்த வெண்கலச் சர்ப்பத்தில், பாவனையில், இயேசு கிறிஸ்துவின் மேல் போடும் குற்றவாளிகளும், தகுதியற்ற பாவிகளுமாகிய நம்மெல்லாருக்காகவும் மரிக்கும் படியாக, தேவன் இயேசு கிறிஸ்துவின் மேல் சுமத்தின நியாயத்தீர்ப்பாய் இருக்கிறது, அதைத் தான் அவன் கண்டான். ஒருநேரத்தில், அவருடைய சீஷர்கள் கடலின் மேல் இருந்தபோது தொல்லையில் அவரை நோக்கிப் பார்த்தார்கள். அவர்கள் என்ன கண்டார்கள். அவர் மூலமாக உதவி வருகின்றதைக் கண்டார்கள். மார்த்தாள், ஒரு நாளில் குடும்பத்தில் ஒரு மரணம் உண்டானபோது அவர்களுடைய சொந்த சகோதரன் மரித்துப் போனான். லாசரு அவளுக்கிருந்த ஒரே சகோதரன். மரணத்தின் நேரத்தில் அவள் அவரை நோக்கிப் பார்த்தாள், அவள் உயிர்த்தெழுதலையும், ஜீவனையும் கண்டாள் அதைத்தான் அவள் அவருக்குள் கண்டாள். இப்பொழுது, அவர் அவளை நிராகரித்தது போன்று காணப்படுகிறது. அவளுடைய சகோதரன் மரித்துப்போன போது அவர் தூர போய்விட்டர். ஆனால் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா உடனடியாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டார். அந்த பையன் மரித்துப்போய் அடக்கம் பண்ணப்பட்டு, நான்கு நாட்கள் ஆகி, அவன் ஏற்கெனவே நாற்றமெடுத்துக் கொண்டிருந்தான். 33அவரைக் குறித்து ஏதோ வித்தியாசமான காரியம் இருக்கிறதென்று மார்த்தாள் அறிந்திருந்தாள். அவள் வேத வார்த்தைகளை வாசித்திருக்கிறாள். அவர்தான் தேவ குமாரன், இம்மானுவேல், வெளிப்பட்ட தேவன் என்று அவள் விசுவாசித்திருந்தாள். அவர் தேவனுடைய பிரதிநிதி என்று அவள் அறிந்திருந்தாள். அந்த நேரத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வார்த்தையாயிருந்த, எலியாவினால் ஒரு மரித்த குழந்தையை உயிரோடு எழுப்பக் கூடுமானால், வார்த்தையின் பரிபூரணமான கிறிஸ்துவாயிருந்தார். ஆவே அவளுடைய சகோதரனை உயிரோடு எழுப்ப, அவரிடம் வல்லமை உண்டு என்று நிச்சயமாய் அறிந்திருந்தாள். அவள் மரணத்தின் வேளையில் துக்கத்தின் வேளையில், அவள் அவரிடம் சென்றாள். அவள் அவரை நோக்கிப் பார்த்தபோது உயிர்த்தெழுதலையும், ஜீவனையும் கண்டாள். அவரைக் குறை கூறும்படியாய், அல்லது அவர் ஏன் வரவில்லையென்று கேட்கும் படியாய், அல்லது அவரைக் கேள்வி கேட்கும்படியாய், அவள் அவரை நோக்கிப் பார்க்கவில்லை. நீங்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையை கேள்வி கேட்கக் கூடாது. அதுதான் இன்றைக்கு முழு மனித இனத்தையும் தொல்லைக்குள் ஆழ்த்தியது. தேவன் தம்முடைய வார்த்தை எல்லாவற்றையும் காத்துக் கொள்வாரா, இல்லையா என்று ஏவான் கேள்வி கேட்டாள். சகோதரர்களே, இன்றிரவு நான் சொல்லுகிறேன் தேவன் எழுதின எல்லா வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டியதான நேரமாயிருக்கிறது, அது ஒவ்வொரு துணிக்கையும் சத்தியமாயிருக்கிறது. ''மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“. 34மரியாள் உயிர்த்தெழுதலையும் ஜீவனையும் கண்டாள் என்று நாம் பார்த்தோம். அந்த சிறிய ஆசாரியன், இரகசிய விசுவாசி, யவீரு அதே காரியம் செய்தான். அவன் இயேசுவைக் கண்டு, அவரை நோக்கிப் பார்த்த போது, அவன் உயிர்த்தெழுதலையும், ஜீவனையும் கண்டான். ஒரு நாளில் பசியாயிருந்த ஜனங்கள் அவரை நோக்கிப் பார்த்து பசி தாங்கக் கூடிய அப்பத்தை கண்டார்கள். இன்றைக்கு பசியாயுள்வவர்கள் ஜீவ அப்பத்தைக் கண்டுபிடிக்கக் கூடும் என்பதற்குப் பாவனையாக, ஒரு கோட்பாட்டைக் கண்டு பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு ஸ்தாபிதரைக் கண்டுபிடிக்கவில்லை; நீங்கள் ஒரு சீர்திருத்தக்காரனைக் கண்டுபிடிக்கவில்லை , ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவை நீங்கள் காணும் போது நீங்கள் ஜீவனைக் கண்டு பிடிக்கிறீர்கள். மரித்துக் கொண்டிருக்கின்ற திருடன், அவனுடைய துயரமான வேளையிலே அவரை நோக்கிப் பார்த்தான், அவன் என்ன கண்டான்? அவனுடைய மன்னிப்பைக் கண்டான். வேறு யாரை நோக்கி அவன் பார்த்திருக்கக் கூடும்? ரோம அரசு அவனை மன்னிக்காது வேறு யாரும் அவனை மன்னிக்க முடியாது. ஆனால் அவனுடைய துக்கத்தில் அவன் இயேசுவை நோக்கிப் பார்த்தான், அவனை மன்னிக்கக்கூடிய ஒருவரை அவன் கண்டான். என்னுடைய சகோதரனே, சகோதரியே இன்றிரவு, ஒரு வெதுவெதுப்பான சபை அங்கத்தினனாய், அல்லது ஒரு வெதுவெதுப்பான பெந்தேகோஸ்தாய், அல்லது நீ யாராய் இருந்தாலும் சரி, நீ எங்கே போகப் போகிறாய் என்பதை அறிந்தவனாய், மரித்துக் கொண்டு இன்றிரவு அவர் தொங்கிக் கொண்டிருந்தது போன்று குற்றசாட்டின் தராசிலே இருப்பாயானால், அவரை நோக்கிப் பார். இன்றிரவே உன்னை விடுதலையாக்க கூடிய அவரைப் பார். நீ வெறுமனே ஒரு அங்கத்தினனாய் மட்டும் இருந்து கொண்டு, ஒரு மனித இருதயத்திற்குள் ஜீவிப்பது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்று நீ அறியாதிருப்பாயானால், அவரை நோக்கிப் பார், அவர் தேவன், அவர் மட்டுமே இந்த ஏழை பாவ வியாதி கொண்ட திருடன், சிலுவையில் தொங்கிக் கொண்டு மன்னிப்பைப் பெற்றதைப் போன்று, நீ மன்னிப்பைக் கண்டடைவாய். 35வியாதியஸ்தர்கள் அவரை தோக்கி பார்த்தார்கள். அவர்கள் என்ன கண்டார்கள்? அவர்கள் ஒரு சுகமளிப்பவரைக் கண்டார்கள். வியாதியுள்ளோர் இன்றைக்கும் கூட, அவரை ஒரு சுகமளிப்பவராக நோக்கிப் பார்க்கலாம். வெண்கலச் சர்ப்பத்தில் பிரதிநிதித்துவமாய் இருந்ததை அவர்கள் அவரிலே கண்டார்கள். அது ஒரு பாவனையாயிருக்குமாயின், இது முத்தின பாவனையாயிருக்கிறது. பார்வையற்றவர்கள் நோக்கிப் பார்த்து காண்கிறார்கள். “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8) ஒரு நேரத்தில் கவிஞன் நோக்கிப் பார்த்தான். என்ன காண முடியும் என்று பார்த்தான். குருடான ப்பானி கிராஸ்பி (Fanny Crosby) ஒரு நேரத்தில் நோக்கிப் பார்த்தாள், என்ன காண முடியும் என்று பார்த்தாள். குருடாயிருந்தபடியினால் அவளுடைய பதில் இதுவேதான்: என்னுடைய சுகத்தின் ஓடையானது ஜீவனைக் காட்டிலும் எனக்கு அதிகமாக இருந்தாலும் இந்த பூமியில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு. உம்மைத் தவிர பரலோகத்தில் எனக்கு யாருண்டு? எட்டி பெரேனட் (Eddie Pruette - (Perronet) ஒரு நேரத்தில் அவனுடைய பாடல்களை அவனால் விற்க முடியாமற் போனபோது என்ன செய்வது என்று வியந்து கொண்டிருந்தான். அவன் அவனுடைய அலுவலகத்திறகு திரும்பிப் போனான். அந்த பரிசுத்தாவியின் ஏவுதல் அவன் மேல் விழுந்தது. பேனாவை எடுத்தான், நோக்கிப் பார்த்தான், அவருடைய வல்லமையில் அவரைக் கண்டான். எழுதத் துவங்கி இந்தப் பாடலை எழுதினான். இயேசுவின் நாமத்தின் வல்லமையை எல்லாரும் ஆரவாரம் செய்யுங்கள் தூதர்கள் சாஷ்டாங்கமாக விழுவார்களாக, இராஜரீக கிரீடத்தைக் கொண்டு வந்து எல்லாவற்றிர்க்கும் கர்த்தர் என்று முடி சூட்டுங்கள். அதைத் தான் அவன்அவரிலே கண்டான் ஓ! என்னே! 36உள்நாட்டு மீன் பிடிப்பவனான பேதுரு, அவனுடைய சகோதரன் அந்திரேயா, யோவானுடைய எழுப்புதலில் கலந்து கொண்டிருந்தான். அவர்கள் மேசியா எப்படி இருப்பார் என்பதைக் குறித்தெல்லாம் விவாதித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுடைய தகப்பனால் அவர்களுக்கு “அநேக மத வைராக்கியமுள்ளவர்கள் (fanatics). மேசியா வருவதற்கு முன்னர் எழும்புவார்கள். ஆனால் நீங்கள் அவரை அறிந்துக் கொள்வீர்கள். அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார்''. அவர் ஒரு தீர்க்கதரியாய் இருப்பார். நமமுடைய தீர்க்கதரிசிகளைப் புரிந்துக் கொள்ள நாம் அறிந்தவர்களாய் இருக்கிறோம் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். முடிவில் ஒரு நாள் அந்திரேயா தான் செய்யக் கூடிய எல்லா தன்னுடைய வற்புறுத்துதலோடும் தான் சொல்லுவதற்கு பேதுருவை இணங்க வைத்தான். ஏனென்றால் கடற்கரையோரத்தில் ஒரு நாள் காலையில் ஒரு கூட்டம் வைக்கும்படியாய் இருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி போயிருந்தான். இயேசு கிறிஸ்துவின் சமூகத்திற்கு முன்பாக நடந்து போனபோது பேதுரு அவரை நோக்கிப் பார்த்த போது என்ன கணடான்? “அவர் உன்னுடைய பெயர் சீமோன். நீ, யோனாவின் குமாரன்” என்று சொன்னார். அது என்றென்றைக்குமாய் அதை முடிந்தது. தேவனுடைய வார்த்தை நிறைவேற்றப்பட்டது என்பதை அவன் அறிந்து கொண்டான். 37ஒரு நேரம் நாத்தான்வேல், பழய ஏற்பாட்டின் ஒரு உண்மையான விசுவாசி, மேசியாவின் வருகைக்காக எதிர் நோக்கி இருந்தான். அவனுடைய நண்பர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்பவனால் இயேசுவின் சமூகத்திற்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டான். மேடையில் அவர் நின்றுக் கொண்டிருக்க திரள் கூட்டம் சூழ்ந்திருக்க, அது எப்படி இருந்தாலும் சரி, வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். நாத்தான்வேல் அந்த ஜெப வரிசையில் அல்லது அது எதுவாயினும் சரி. வந்து அவரை முதன் முறையாய்ப் பார்த்தபோது, ஒரு சத்தம் அவனண்டை வந்ததை, அவன் கேட்டான், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று சொன்னது. அவன், “ரபி, நீர் என்னை எப்படி அறிவீர்? நீர் எப்பொழுது என்னைப் பார்த்தீர்'' என்றான்? அவர், ''பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னர், நீ ஒரு மரத்தின் கீழ் இருந்தாயே அப்போது நான்உன்னைக் கண்டேன்'', என்றார். 38நாத்தான்வேல் தான் என்ன கண்டான் என்பதாய் அறிக்கை செய்தான்? அவன் என்ன சொன்னான்? ''நீர் கிறிஸ்து, நீர் இஸ்ரவேலின் இராஜா. நீர் தேவனுடைய குமாரன்''. அந்த நாட்களுக்குரிய தேவனுடைய உண்மையான வார்த்தையை அவன் பார்த்தபோது, அவன் அதைத்தான் கண்டான். 400 வருடங்களாக ஒரு தீர்க்கதரிசி கூட இல்லாதிருந்து, அவன் இருதயத்திலிருந்த சிந்தனைகளெல்லாம் அவர் அறிந்திருக்கின்றதை அவன் கண்டான். அவன் என்ன செய்தான். மேசியாவிற்கு குறைவாக வேறொன்றுமிருக்காது என்று அவன் அறிந்திருந்தான். நமக்கு அது உண்டாயிருக்கவில்லை. அது வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறது. காலம் சமீபமாயிருக்கிறது என்பதை எல்லாரும் அறிந்திருந்தார்கள். அதேவிதமாக இன்றைக்கும் நாம் அதே காரியத்தை அறிந்திருக்கிறோம். இந்த காரியங்களை இயேசு வாக்குப் பண்ணியிருக்கிறார் என்று நாம் அறிவோம். அவர் சொன்னார், ''லோத்தின் நாட்களில் நடந்தது போலவே மனுஷ குமாரன் வரும் நாட்களிலும், நடக்கும். அவர் வரும்போதும் அப்படியே நடக்கும்''. இந்த காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றதை நாம் காணுகின்றோம். 39நீங்கள் நோக்கி பார்க்கும் போது என்ன காண்கிறீர்கள்? புராணக் கதைகள் என்று நினைக்கிறீர்களா அல்லது ஏதோ ஒருவிதமான சிந்தையை அறிவது (telepathy) காண்கிறீர்களா அல்லது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அந்த நாட்களில் செய்தது போன்றா? பரிசேயர்கள் அவரை நோக்கிப் பார்த்தார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள்? “இந்த மனிதனிடத்தில் ஒரு பிசாசு இருக்கிறது''. அதே ஜனங்கள் மனித வர்க்கம், அதே நபரை நோக்கிப் பார்க்கிறார்கள், ஒருவன் தேவகுமாரனை ரூபகாரப்படுத்தப்பட்ட வாக்குதத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாய் காணுகிறான்; இன்னொருவன் அவரை பிசாசு என்று அழைக்கிறான். பரிசுத்தாவியின் வல்லமை ஒரு கட்டடத்தை அப்படியே சுழற்றி, இந்த கடைசி நாட்களில் அவர் செய்ய வேண்டியதைச் செய்து, அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை நீ காணும் போது, நீ எதை நோக்கிப் பார்க்கின்றாய்? நீ நோக்கிப் பார்க்கும் போது, நீ என்ன காணுகின்றாய்? தேவனுடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்படுவதை நீ காண்பாயானால், அது தேவனுடைய பரிசுத்த ஆவியாயிருக்கிறது. ஆம் ஐயா. 40அபிஷேகம் பண்ணப்பட்ட வாக்குத்தத்தம் மாமிசமாவதை காணும்படியாக, வாக்குப் பண்ணப்பட்ட வார்த்தையைக் காண வேண்டுமென்று ஜீவித்த நாத்தான்வேல் அதனைக் கண்டான். தீர்க்கதரிசியாகிய மோசே அவ்வதமாக சொல்லியிருந்தான். அந்த மோசே அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி, அந்த வார்த்தையை வாக்கு பண்ணியிருந்தான். ஒரு நாள் கிணற்றாண்டை ஒரு ஸ்திரீ... அநேக ஜனங்கள் அவரைப் புறக்கணித்துத் தள்ளினார்கள். பரிசேயர்களும், சதுசேயர்களும், அவரை ''ஒரு பிசாசு'' என்று அழைத்தார்கள். அவர்கள், ''இவன் இதை குறி சொல்லுகிறதினால் செய்கிறான். அவன் ஒரு பொல்லாத ஆவி. அவன் பயித்தியக்காரன். அவனுக்கு போவதற்கு வேறு இடமில்லை. அவனுக்கிருக்கின்ற தொல்லையே அதுதான். கொள்கையை கைவிட்டவன்'' என்று சொன்னார்கள். 41என்ன சம்பவித்தது? என்ன சம்பவித்தது? அவர் சமாரியாவின் வழியாய் கடந்து சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். ஒரு நாள் அவர் அங்கு போனபோது, ஒரு பரந்த காட்சியில் கிணற்றண்டை உட்கார்ந்தார். அங்கே குடிக்க தண்ணீர் மொண்டு கொண்டு போகும்படியாய் ஒரு ஸ்திரீ வந்தாள். அப்பொழுது அவள், ''ஸ்திரீயே தாகத்துக்கு தா'' என்று சொல்லுகின்ற ஒரு சத்தத்தைக் கேட்டாள். அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவள் என்ன கண்டாள்? முதலில் அவளாலே அதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவரை அவள் கேள்வி கேட்டாள். சமாரியரிடம் இப்படி கேட்பது யூதருக்கு வழக்கமில்லையே என்றாள். ''ஆனால் ஸ்திரீயே நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை அறிந்திருப்பாயானால்'' என்று சொன்னார்! 42இப்பொழுது ஞாபகத்தில் வையுங்கள். அங்கே ஒரு சிறு வெளிச்சம் இருந்தது, ஜீவித்து உள்ளே இருந்தது. உலக தோற்றத்திற்கு முன்பாக முன்குறிக்கப்பட்டது, அதற்காக அவள் கவனித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு வேத சாஸ்திரம் போன்று அவளுக்கு சொல்லப்பட்ட காரியங்களினால் அவள் சலித்துப் போயிருத்தாள். ஆனால் அவள் எதோ ஒரு காரியத்திற்காக கவனித்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் ஒரு மேசியா வந்து கொண்டிருக்கிறார் என்று அவள் அறிந்திருந்தாள். அவர், ''நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா'' என்றார். அவள், ''எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''நீ உண்மையைச் சொன்னாய். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்'' என்று சொன்னார். சீக்கிரமாக அந்த விதையானது ஜீவன் பெற்று தளிர்த்தது. அவள் என்ன கண்டாள்? அவள் மேசியாவின் அடையாளத்தை ஒரு மனிதனுக்குள் கண்டாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதான வார்த்தை வெளிப்பட்டதை அவள் கண்டாள். அவள், “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். அநேக வருஷங்களாக எங்களுக்கு தீர்க்கதரிசியே இல்லை. மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது இவைகளை எங்களுக்கு சொல்லுவார். அதைத்தான் அவர் செய்வார்'' என்று சொன்னாள். புரிகின்றதா? அவள் என்ன கண்டான், அவள் என்ன காண்கிறாள்? அந்த நாளுக்கென்று வாக்குதத்தம் பண்ணப்பட்ட வார்த்தை வெளிப்பட்டது என்ற அடையாளத்தை அவள் கண்டான். பரிசுத்த ஆவி, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை, ''விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன'' என்னும் ஒரு சபை, இவை இந்த நாளுக்கென்று வாக்களிக்கப்பட்டிருக்கிறது. நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று இயேசு வாக்களித்திருக்கிறார். நீ காணும்போது எதை நோக்கிப் பார்க்கிறாய்? 43ஞாயிற்று கிழமை காலையில் நீ சபைக்கு போகும் போது ஒரு ஆர்கனையா, நன்றாக ஆடையணிந்த ஒரு ஊழியக்காரனையா, விசேஷமான உடையணிந்த பாடல் குழுவையா, வர்ணந் தீட்டப்பட்டுள்ள ஒரு கூட்ட பெண்களையா, என்னத்தை காணும்படியாய் நீ பார்க்கிறாய்? நீ எதற்காக பார்க்கின்றாய், சபையில் ஏதாவது ஒரு சமுதாயத்தையா? நீ இதை சார்ந்தவன், அதை சார்ந்தவன் என்பதையா நீ என்ன பார்க்கின்றாய்? அது நீங்கள் எதைப் பார்க்கின்றீர்களோ அதைக் குறித்து இங்கே கவனியுங்கள். நீங்கள் சுவிசேஷத்தை சுமந்து கொண்டு போகும்போது, பரிசுத்தாவியானவர் உள்ளே வந்து, ஒரு கூட்ட பழைய விதமான ஐனங்களின் மத்தியில் அதை ரூபகாரப்படுத்துவாரானால், அது உங்களுக்கு அந்நியமாய் காணப்படுவதில், ஆச்சரியம் எதுமில்லை. உங்களுக்கு அதை விசுவாசிப்பது கடினமாயிருக்கும். அன்றிரவு நான் யோசேப்பைக் குறித்து உங்களுக்கு சொன்னது போன்று ''மரியாள் கர்ப்பமாயிருக்கிறாள் என்பதை நினைப்பது அவனுக்கு மிகவும் கடினமாயிருந்தது. அவள் எப்படி அப்படி இருக்கக் கூடும். அந்த விதமான ஒரு பரிசுத்தமான சிறிய ஸ்திரீ. காபிரியேல் தூதன் தனக்கு தரிசனமானதாய் அவள் சொல்லுகிறாள்''. ஆனால் அது அவ்வளவு வழக்கத்திற்கு மாறாய் இருக்கிறது. அந்த விதமான ஒரு காரியத்திற்கு அது அவ்வளவு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. அதற்கு முன்பு அப்படி நடந்ததில்லை. அங்கு தான் தேவன் வாசம் பண்ணுகிறார்? மாமிசமான சிந்தைக்கு அவர் வழக்கத்திற்கு மாறானதில் இருக்கிறார். ஆனால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று விசுவாசிக்கின்றவகளுக்கு, எல்லா காரியங்களும் தேவனால் கூடும் என்பதாய் இருக்கிறது. அவர் வாக்குப் பண்ணியிருக்கின்ற எல்லா வார்த்தையும் நிறைவேறித் தீரும். வழக்கத்திற்கு மாறான காரியங்களே அவரைத் தேவனாக ஆக்குகின்றது. அவர் எல்லாவற்றையும் ஜனங்களுக்கு வழக்கத்திற்கு மாறானதாய் ஆக்குகிறார். ஆம் ஐயா. எல்லாம் சரி தான். ஸ்திரீயானவள் அவரை நோக்கிப் பார்த்தாள். மேசியாவின் அடையாளத்தை தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டதை அவள் கண்டாள். அநேகர், அதே ஜனங்கள் அவரை நோக்கிப் பார்த்து, ஒன்றையுங் காணவில்லை. 44நோவாவின் நாட்களிலிருந்த அவிசுவாசிகள், அவர்கள் என்ன கண்டார்கள்? ஒரு மத வைராக்கியன், பேழை என்று அவன் அழைக்கின்றதொன்றின் மீது தவறைச் செய்கிறவனாய்க் கண்டார்கள். அவர்கள் கண்டதெல்லாம் அவ்வளவுதான். அந்த பேழையோ சர்வ வல்லவரிடமிருந்து பெற்ற ஒரு தரிசனத்தின் மூலமாகக் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அவன் அடித்து நொறுக்குகின்றதின் மீதில், அவன் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்ற செய்தியின் மீதில், தான் விசுவாசிக்கிறான் என்றும், தான் நீதிமான் என்றும், அதை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறான் என்றும், சாட்சி பகருகின்ற வண்ணமாய் அவன் அந்த பேழையை, தன்னுடைய செய்தியைக் கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் பிரசங்கித்ததின்படி ஜீவித்தான். அதைத் தான் நாம் இன்றைக்குச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல், பிரசங்கம் செய்ய எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. சரியா!வேத சாஸ்திரிகளும் கணித மேதைகளும் மற்றவர்களும் உள்ளது அற்று போகும்படி அவை எல்லாவற்றையும் உனக்கு விவரிக்கக் கூடும். ஆனால் ஒரு மளிதன் எப்பொழுதாவது வனாந்திரத்திற்கு பின்பக்கமாக போய் அந்த பரிசுத்த இடத்தில், மோசேயை போன்று தேவனை சந்தித்திருப்பானேயாயின், அவனிடமிருந்து அதை எடுத்துப் போட ஒருவனாலும் முடியாது. அவன் அறிந்திருக்கிறான். அங்கிருந்தவன் அவனே. அதை குறித்து அவனுக்கு சொல்ல அங்கே ஒருவனும் இல்லை. அவன் அங்கு இருந்தான், அந்த காரணத்தின் நிமித்தமாகத்தான் இயேசு அவருடைய சீஷர்களுக்கு, ''நீங்கள் எருசலேமுக்கு போய், பரத்திலிருந்து நீங்கள் வல்லமையை பெற்றுக் கொள்ளுமட்டாய் பிரசங்கியாதிருங்கள். அதற்குப் பின்பு நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்று கட்டளையிட்டார். அதைத் தான் அவர்கள் கண்டார்கள். ஆம் ஐயா! 45நோவா அவர்களால் ஒன்றையுங்காண முடியவில்லை. அதை செய்த பின்பு அவர்கள் என்ன செய்தார்கள்? தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து, அவர்கள் மீதே நியாயத் தீர்ப்பை கொண்டு வந்தார்கள். சரியாக அதுதான். ஜாக்மூருடன் சேர்ந்து, அவர் சொன்னதாக சொல்லாமல், நான் இதை சொல்லுகிறேன். ஏனெனில் இதில் அர்த்தமிருக்கின்றபடியினால் தேவன் அமெரிக்காவை மூழ்த்தி அவளை எரிக்கவில்லையானால், சோதோமையும் கொமோராவையும் அவர் எழுப்பி, அவர்களை எரித்ததிற்காக மன்னிப்பு கேட்க வேண்டி நேரிடும் என்று ஜாக்மூர் அவர்கள் சொன்னார். அது உண்மைதான். தேவன் நீதியுள்ளவர். தேவனுடைய வார்த்தை நீதியான கைமாறை உடையதாயிருக்கிறது. இன்றைக்கு அவருடைய வார்த்தைக்கு எதிராக உள்ள கிரியைகளுக்காக அவர் உலகத்தை நிச்சயமாய் நியாயந்தீர்ப்பார். நமக்கு எத்தனை கூடுதல்கள் இருந்தாலும் சரி, எத்தனை மார்க்க சம்பந்தமான கூடுதல்கள் இருந்தாலும் சரி, காரியம் அதுவல்ல, இந்த வார்த்தைதான்... 46கவனியுங்கள், இயேசுவானவர் பூமியிலிருந்த போது அந்த நாளில் இருந்ததிற்கு மேலாக, மார்க்க சம்மந்தமான நேரம் இனி இல்லை. ஓ! சகல காரியங்களும், மார்க்கத்திலும், பாரம்பரியத்திலும், விழுங்கப்பட்டாயிற்று. அவைகளெல்லாமும் தவறாகும். அந்த சிறிய, வழுக்கை தலை பிரசங்கியாராகிய ஆமோஸ் வந்த போதும், அவ்வாறே இருந்தது. அவன் எங்கிருந்து வந்தான் என்று நாம் அறியோம். அவன் குன்றுகளினூடாக வந்து சமாரியாவை நோக்கிப் பார்த்தபோது, அவனுடைய கண்களும் குறுகினது. அது பீனிக்ஸ் போன்று ஒரு பெரிய உல்லாச பிரயாணிகளின் பட்டணமாயிருந்தது. உலகமெங்கிலுமிருந்து அநேக ஜனங்கள், இந்த பெரிய பட்டணத்தைப் பார்ப்பதற்கு இது எவ்வளவு அழகாய் இருக்கின்றது என்பதைக் காணும்படியாக வருகிறார்கள். ஓ! சகல காரியங்களும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. இரவு சங்கங்களும், களியாட்டத்திற்கு ஒரு உண்மையான ஸ்தலமுமாய் இருந்தது. “ஜீவிப்பதற்கான ஒரு ஸ்தலம்'' என்று சொன்னார்கள். ஆனால் இந்த சிறு குடியானவ சிறுவன் பரிசுத்த ஆவியினால் தொடப்பட்ட போது, அங்கே அவன் வந்தான். அவனுக்காக கூட்டங்கள் ஒழுங்கு செய்ய முன்னதாக அனுப்பப்பட யாருமிருக்கவில்லை, அறிவிப்புகள் எழுப்பப்படவில்லை, அவனோடு கூட ஒவ்வி செய்ய ஒரு ஸ்தாபனமுமில்லை. அவனுக்கு உடன் துணையாயிருக்க யாருமில்லை. ஆனால் அவன் அந்த குன்றுகளின் மேலாக வந்து அவனுடைய கண்களை குறுக்கி அந்த பட்டணத்தை நோக்கிப் பார்த்த போது, மற்றவர்கள் காணாத ஒன்றை இவன் கண்டான். மற்ற யாவரும் அந்த களியாட்டத்தையும் அந்த பட்டணத்தின் மற்ற காரியங்களையும் கண்டார்கள். ஆனால் அவனோ அதற்கு எதிராக வரக் காத்துக் கொண்டிருக்கின்றதான தேவனுடைய நியாயத் தீர்ப்பை கண்டான். ''பயித்தியம்'' என்று அவனை அழைத்தார்கள். ஆனால் பதினோரு வருடங்களுக்கு பிற்பாடு, அவன் சொன்ன விதமாகவே எல்லா காரியங்களும் சம்பவித்தது. 47இன்றைக்கு சபைகள் நடந்து கொண்டிருக்கின்ற விதத்தையும், ஜனங்கள் போய்க் கொண்டிருக்கின்ற விதத்தையும், நோக்கிப் பார்த்த ஒரு மனிதன், ஆசீர்வாதத்தை வருங்காலத்திற்கு முன்னறிவிப்பானேயானால் எப்படி? நான் நியாயத்தீர்ப்பை தான் முன்னறிவிக்கிறேன், அதை மட்டுந்தான். நீதியுள்ள தேவன் தம்முடைய வார்த்தையை அசட்டை செய்கிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பை கொண்டுவர வேண்டியவராயிருக்கிறார். நமக்கு முன்பாக வந்து அதை அடையாளங்காட்டி, அதை சரியாக ஆக்குவதும் அவருக்கு நீதியாயிருக்கிறது. ஆனால் ஒரு நீதியுள்ள தேவன், காலங்களின் ஊடாக, அவருடைய திட்டத்தை மாற்ற முடியாது. அவருடைய திட்டத்தை அவர் ஒரு போதும், மாற்றுகிறதில்லை. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய வழிகள் அவ்விதமாகவே இருக்கின்றது. அவருடைய வார்த்தை அவ்விதமாகவே இருக்கிறது. அவரும் அவ்விதமாகவே இருக்கிறார். யாராவது மனந்திரும்புவதாயிருந்தால், அவர் இரக்கம் நிறைந்தவராயிருக்கிறார். ஆனால் நீங்கள் மனந்திரும்பல்லையென்றால் நியாயத்தீர்ப்பு தொடரும். 48பார்வோன், அவன் நோக்கி பார்த்த போது, அப்படிப்பட்டதான ஒரு மத வைராக்கியனை, மத வைராக்கிய தீர்க்கதரிசியை, விடுதலையின் உரிமைகளைக் கொண்ட ஒருவனை, அதைதான் அவனால் கான முடிந்தது. ஆனால் இஸ்ரவேலரோ, மோசேயின் மேல் தேவனுடைய கரம் இருப்பதைக் கண்டார்கள். ஆம் ஐயா. ஐஸ்வரியவான் நோக்கி பார்த்து, அவனிடம் காரியங்கள் இருக்கின்றதைக் கண்டான், ஆனால் அவனுடைய ஸ்தாபனமோ, இதனூடாக அவன் போகக் கூடியதைக் காட்டிலும் மிகவும் பெரியதாய் காணப்பட்டது. அவனுடைய அடுத்த பார்வை எங்கிருந்து வந்தது? அவன் நரகத்திற்குள்ளிருந்து பார்த்தான்; சரியாக அதுதான், அவனுக்கு நியாயத்தீர்ப்பு வந்தது. அவன் அடுத்த முறை பார்த்தபோது அப்படி இருந்தது. அந்த விதமாகத்தான் இன்றைக்கு அநேகருக்கு இருக்கப் போகின்றது. அந்த ரோம போர்ச் சேவகன் ஒரு சமயம், அவரை சிலுவையிலறையும் போது; ஒரு பார்வை பார்த்தான். அவர் என்ன செய்தார் என்பதை காணும்படியாய் பார்த்தான். ஆனால் அது காலம் கடந்ததாயிருந்தது. நண்பர்களே, அமெரிக்காவுங் கூட அதை செய்யப் போகின்றது. “ஒரு நாளில் அவர்கள் நோக்கிப் பார்த்து உண்மையாகவே அது தேவ குமாரன்'' என்று சொல்லப் போகிறார்கள். ஆனால் அது காலம் கடந்ததாயிருக்கும். கடைசி முறையாக அவர்கள் சிரித்து பரிகசித்தார்கள். எந்த இடத்தில் அவன் இரட்சிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை மட்டுந்தான். அவனால் நோக்கி அப்போது பார்க்கமுடியும். ஆனால் அவ்வமயம் அது மிகவும் காலம் கடந்ததாயிருக்கும். ஜீவனின் அதிபதியை அவன் சிலுவையிலறைந்தான். அவர்கள் மத்தியிலேயே சரியாக அவர் யாரென்று தெளிவாக ரூபகாரப்படுத்திக் காணும் போதே, இன்றைக்கு, அநேக சமயங்களில் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய இருதயங்களிலிருந்து தள்ளிப் போடுகிறார்கள். ஆம் ஐயா, 49ஒரு நாளில் பிலாத்து அவரை நோக்கிப் பார்த்து, நிச்சயமடைந்தான். ஆனால் அவனுடைய அரசியலோ மிகப் பெரியதாயிருந்தது. அவனால் கூடாமற்போயிற்று, அது மட்டுமாக அவனால் நிற்க முடியாமற் போயிற்று, லூத்தர் ஒரு பார்வை பார்த்து, நீதிமானாகுதலை கண்டான். அதனோடு அவன் போனான். பின்பு அவர்கள் ஸ்தாபனமாக்கிக் கொண்டார்கள். தொடர்ந்து வந்தான் வெஸ்லி, கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, பரிசுத்தமாகுதலை, சபையானது பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்பதனைக் கண்டான். அந்த பரிசுத்தமாகுதலோடு கூட அவன் போய்விட்டான். தொடர்ந்து வந்தார்கள் பெந்தேகோஸ்துகள், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலைக் கண்டார்கள். அவர்கள் யாவரும் என்ன செய்தார்கள்? சரியாக கத்தோலிக்க சபை செய்த மாதிரியாகவே, மறுபடியுமாக அதை அப்படியே செய்தார்கள். அதை ஸ்த பனமாக்கிக் கொண்டார்கள். ஓ, தேவனே! ஒரு நாளில் நான் அவரை நோக்கிப் பார்த்தேன். அப்படி நான் செய்த போது, நான் அல்பாவையும் ஓமேகாவையும் பார்த்தேன். நான் துவக்கத்தையும் முடிவையும் கண்டேன், நான் இயேசு கிறிஸ்துவை நேற்று இருந்தது போலவே கண்டேன். என்னுடைய பாவங்களை மன்னிக்க ஒருவரைக் கண்டேன். என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்ட யாரோ ஒருவரைக் கண்டேன். நீங்கள் அவரை நோக்கிப் பார்த்த போது என்ன கண்டீர்கள்? 50இங்கு உட்கார்ந்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய பழய நண்பரான பில்டாச் (Bill Dauch) என்பவரை இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இப்பொழுது 92 வயதிலிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அதிக நாட்களுக்கு முன்பல்ல, ஆறு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு முழுமையாக இருதயம் நின்று போனதோடு கூட இருதயக் கோளாறும் உண்டாயிற்று. ''அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்தியர் சொல்கிறார்'', அவருடைய மனைவி என்னை அழைத்து ''சகோதரன் பிரன்ஹாம் வாருங்கள். அவர் மரித்துக் கொண்டு இருக்கின்றார். பில் உங்களுடைய நண்பன்'' என்று சொன்னாள். ''சரி நான் அதை செய்கிறேன்'' என்று சொன்னேன். நான் அவருடைய வீடு போகுமட்டாய், வழியில் ஜெபித்துக் கொண்டிருந்தேன்'' தேவனே, “போய் வாரும் என்று அவருக்கு குட்பை (good-bye) சொல்ல நான் வெறுக்கிறேன்'', நான் அங்கே போய் சேருமட்டாய் அவர் ஜீவித்தால் தான் நான் அப்படி சொல்ல முடியும் என்று நான் அறிவேன். பிராணவாயு செலுத்திக் கொண் டிருக்கும் போதே, இருதயம் முழுமையாய் வேலை செய்யத் தவறினது, 91 வயதானவர். ஒரு பெட்ரோல் நிரப்பும் இடத்தில் காரை விட்டுவெளியே வந்தேன் நோக்கிப் பார்த்தேன். நான் அப்படி பார்த்த போது, பில் அந்த வீதியாக வந்துக் கொண்டு என்னோடு கைகுலுக்குவதை நான் கண்டேன். இன்றிரவு அவர் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அதை அவருக்கு அறிவித்த வைத்தியர் மரித்துவிட்டார். இதோ ஓஹாயோ, லிம்மாவிலிருந்து தாமாகவே காரை ஓட்டிக் கொண்டு பனியிலும், குளிரிலும், என்னுடைய ஒவ்வொரு கூட்டங்களுக்கும் தொடர்ந்து வருகிறார். இங்கு அமர்ந்திருக்கிறார் பில் டாச். ஏன்? நாங்கள் நோக்கிப் பார்த்தோம். நாங்கள் ஏதோ ஒன்றை கண்டோம். ஒரு பனி புயலின் போது அங்கே தூரத்திலே கொலரோடோவில் நான் நோக்கிப் பார்த்து கண்டதாக கடந்த இரவு நான் சொல்லிக் கொண்டிருந்தேனே. அந்த தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். 51இங்கே உட்கரர்ந்திருக்கிறார் சகோ. வே (Way) ஒரு ஆங்கிலேயன். அங்கே வலது பக்கமாக உட்கார்ந்துக் கொண்டு இருப்பதை சற்று முன்பாக கவனித்தேன். அவர் இந்தியானாவிலிருந்து வருகிறார். அவர் ஒரு ஆங்கிலேயன், அவருடைய மனைவி ஒரு பதிவு செய்யப்பட்ட நர்ஸ். அருமையான மனிதன்! ஒரு நாள் நான் அவரோடு பேசினேன், நான் ஒரு நாள் கூட்டத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் பேசின காரியத்தை அவர் தன் இருதயத்திற்குள் எதிர்த்தார். அவர் அப்படி செய்த போது ஜனக் கூட்டத்தின் மத்தியில் மரித்தவராக விழுந்தார். அங்கே அவர் மரித்தார். அவருடைய மனைவி அவரை பிடித்து நாடி பார்த்தாள். அவருடைய கண்களும் முகமும் கருத்தது. அவருடைய கண்கள் வெளியாக பிதுங்கி இருந்தது, அவருடைய தலைக்கு பின்னாக போயிருந்தது. நான், ''அப்படியே நில்லுங்கள்'' என்றேன். கீழே அவரை நோக்கிப் பார்த்து, ''ஓ, அந்த மரித்த மனிதன் அங்கே இருக்கிறார்'' என்று நினைத்தேன். கீழே போய், என்னுடைய கைகளை அவர் மேல் வைத்தபோது இந்த மேஜையை போன்று அவ்வளவாய் குளிர்ந்து போயிருந்தார். அவர் மரித்து போய்விட்டார். சகோதரி வே, ''ஓ, சகோதரர் பிரன்ஹாம் அவர் போய்விட்டார். அவர் போய்விட்டார்'' என்று அவள் உரத்த குரலில் கூச்சலிட்டாள். 52நான் தூர பார்த்தேன். நான் உயிர்த்தெழுதலையும் ஜீவனையும் கண்டேன். இயேசு எனக்குச் சொன்ன ஜெபத்தை நான் ஜெபித்தேன். இதோ அவர் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். மரித்தோரிலிருந்து எழுந்து வந்து நேரடியாக இங்கேயே இருக்கின்றார். அது சரியே, திரு. வே ஒரு நிமிஷம் சற்று எழுந்திருப்பீரானால் அது போதும். அதனால் ஜனங்கள் மட்டும் சற்று காணும் படியாக. இங்கே பில் டாச் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அது என்ன? ஏனென்றால், லாசருவை எழுப்பினவரும், அன்றைக்கிருந்தது போன்றே இன்றைக்குமிருக்கிறவருமான, அவரை நாம் நோக்கிப் பார்க்கிறோம். அவர் நேற்று, இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆம், அவர் மாறுகிறதில்லை. 53இங்கே எனக்கு முன்பாக ஒரு பிரசங்கியார் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் ப்ளேர் (Blair) அவருடைய சிறு பையன் அன்றொரு நாள் விபத்துக்குள்ளானான். அவருடைய மனைவியும் இங்கே உட்கார்ந்துக் கொண்டு, அவர்களுடைய கண்ணீரை இப்பொழுது துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை தொலைபேசியின் வாயிலாக அழைத்து, ''சகோதரன் பிரன்ஹாம் என்னுடைய சின்ன பையன் காரில் இருந்தான், அது மலையின் மேல் ஏரி அவன் நசுங்கிவிட்டான். அவன் நசுங்கி மூளை அதிர்ச்சி, எல்லாமாகிவிட்டது. அவன் போய்விட்டான். சுவாசம் மட்டும் லேசாக வந்துக் கொண்டிருக்கிறது,'' ஜெபம் செய்வீரா என்று கேட் டனர். “நாம் ஜெபிப்போம்'' என்று சொன்னேன். தொலைபேசியில் நோக்கிப் பார்த்த வண்ணமாய் ஜெபிக்க ஆரம்பித்தேன். நான், 'கர்த்தராகிய ஆண்டவரே நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்'' என்று சொன்னேன்? நான் ஒரு சிறு பையன் போவதையும், ஓடுவதையும், கயிறு தாண்டுவதையும் கண்டேன். நான், ''அவன் சுகமடைய போகிறான் என்று சொன்னேன். அவன் இன்றிரவு இங்கே இருக்கிறான். அவர்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நோக்கிப் பாருங்கள், நோக்கிப் பாருங்கள், நீங்கள் அவரை பார்க்கும் போது நீங்கள் என்ன காணுகிறீர்கள். நான் அதே சுகமளிப்பவரை காணுகிறேன். ஆமென்! கலிலேயாவில் நடந்த அதே நபரை நான் காணுகிறேன். அவருடைய வல்லமையில் நான் அவரை காணுகிறேன். அவர் சிந்தனைகளையும் இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதை, கடைசிக் காலத்திற்கு முன்பாக அடையாளத்தை காட்டுகின்றதை நான் காணுகிறேன். அவர் இன்றைக்கு என்னவாய் இருக்கின்றார் என்பதை சொல்லிக் கொண்டு நாம் எப்படி ஜனங்களின் மத்தியிலும், தேசங்களினூடாகவும் போக முடியும்! 54நான் என்ன நினைக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்? ஒரு நேரத்தில் அந்த வயதான நீக்ரோ அடிமைகள் இருந்த காலத்தில், சொன்னது போன்று. ஒரு நாள் அவன் வந்து ''உங்களுக்குத் தெரியுமா இப்பொழுது நான் சுயாதீனனாய் இருக்கிறேன்,'' என்று சொன்னான். இப்படி அவன் மற்ற அடிமைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். இந்த காரியமானது அவனுடைய முதலாளியினிடத்திற்கு எட்டினது. முதலாளியானவன் அவனை அழைத்து, ''சாம் உள்ளே வா,'' அங்கே மற்றும் அடிமைகளிடத்தில், “நீ சொல்லிக் கொண்டிருந்தது என்ன'' என்றான்? அவன், ''முதலாளி நான் விடுவிக்கப்பட்டவனாய் இருக்கிறேன்'' என்றான். அவர், ''நீ எப்படி விடுவிக்கப்பட்டிருக்கின்றாய்'' என்றான். அவன், ''நான் பாவம் மரணம் என்ற பிரமாணத்தினின்று விடுவிக்கப்பட்டிருக்கிறேன், ஏனென்றால் அவர் என்னை விடுவித்துள்ளார்'' என்றான். அவன், ''சாம் நீ அதைதான் கூறுகின்றாயா'' என்றான்? அவன், ''ஆம்'' என்றான். அவர், ''நான் கீழே போய் உண்னுடைய விடுதலைக்கான சீட்டை கையெழுத்திட்டு நீ போய் மற்ற உன் சகோதரருக்கு அதை குறித்து சொல்ல அனுமதிக்கிறேன்'' என்றார். 55அந்த வயதான மனிதன் வருஷங்களாக பிரசங்கித்தான். முடிவிலே, ஒரு நாள், அவன் அவனுடைய கதவண்டை வந்தான். இந்த ஜீவியத்திலிருந்து அவன் பிரிய வேண்டி வந்தது, அவன் மயக்கமுற்ற நிலைமையில் சில நாட்கள் தன்னுடைய படுக்கையின் மேல் இருந்த போது, அநேக அவனுடைய வெள்ளைக்கார நண்பர்கள், அவன் ஒரு வீரமுள்ள கிறிஸ்துவின் போர்ச் சேவகனாக இருந்தபடியினால் அவனுக்கு இறுதி வணக்கம் செலுத்தும்படியாக வந்தார்கள். அவன் அங்கே படுக்கையின்மேல் இருந்தபோது, தன் நினைவுக்கு வந்தான். சுற்று முற்றும் பார்த்தான். ''சாம், நீ இன்னமும் போகவில்லையா''? என்றான். அவன், “இல்லை”. “நான் திரும்பி வரவேண்டி இருந்தது. நான் அங்கு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்'' என்றான். ''நான் சொப்பனங் கண்டிருக்க வேண்டும். நான் அங்கு இருந்தேன் என்று நினைத்தேன். நான் இங்கே நின்றுக் கொண்டிருந்தபோது அந்த கதவு மட்டுத்தான் கொண்டு செல்லப்பட்டேன். ஒரு தூதன் மேலே ஏறி வந்து, சாம் வந்து உன் கிரீடத்தை வாங்கிக்கொள் என்று சொன்னான்'' என்றான். அவன், “ஒரு கிரீடத்தை குறித்தோ வஸ்திரத்தை குறித்தோ என்னண்டை பேசாதே. நான் இங்கேயே நின்றுக் கொண்டு லட்சக்கணக்கான வருஷங்கள் அவரையே பார்க்கட்டும்'' என்றான் தன்னை பாவத்தினின்றும் மரணத்தினின்றும் விடுவித்தவரை அவன் அவரிலே கண்டான். அவனோடு எல்லா நேரத்திலும் கூட இருந்த வரை கண்டான். ஓ, தேவனே! 56அன்றொரு நாள், நான் படுக்கையின்மேல் படுத்திருந்தேன். என்னுடைய ஜீவியக் கதை உங்களுக்கு தெரியும், எனக்கு வயதான நாய் இருக்கிறது. நாங்கள் அதை ப்ரிட்ஸ் (Fritz) என்று அழைப்போம். அது என்னை பள்ளிக்கூடத்திற்கும் ஒப்புசம் மறைத்துக் கொள்ளுதலுக்கும் மற்றக் காரியங்களுக்கும் கொண்டு செல்லும். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் அதைக் கொண்டு செல்வேன். நான் விழித்தெழுந்து எங்களுடைய பழைய மர வீட்டிலிருந்து படிகள் வழியாக கீழே இறங்கி வரும்போதே தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்பேன். அது ஒரு போதும் எனக்கு தவறினதில்லை. எப்பொழுதும் அதனிடம் போவேன், எனக்கு ஏதாவது வைத்திருக்கும், இந்த காலைகள் ஒன்றில் அந்த ஓடையின் பக்கமாக குரைக்கும் சத்தம் கேட்கும். நான் அங்கே போய் அது என்ன வைத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்; அது சரியாகத்தான் இருக்கும். 57கவனியுங்கள், சகோதரனே நான் உனக்கு சொல்லட்டும். நீங்கள் இயேசுகிறிஸ்துவை பார்க்கும் போது, நீங்கள் காண வேண் டிபது ஒன்றே ஒன்று. அவரிலே நீங்கள் தேவனைக் காண வேண்டும், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரைக் காண வேண்டும். அன்றைக்கு அவர் செய்த வண்ணமே இன்றைக்கும் செய்ய, அவர் இன்றிரவு இங்கு இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜெபிக்கும்படியாய் நாம் சற்று நேரம் தலைகளை வணங்குவோம். ஜெபியுங்கள். ''சகோதரன் பிரன்ஹாம், என்மேல் கிருபையாய் இருக்கும்படி தேவனிடம் கேளும் நான் அவரை நோக்கிப் பார்த்து வித்தியாசமாய் காண விரும்புகிறேன்'', நான் அவரை நோக்கிப் பார்த்து யூகித்திருக்கிறேன். நான் அவரை நோக்கிப் பார்த்து வியந்துள்ளேன் நான் அவரை நோக்கிப் பார்த்து வினவினேன். அவர் நிச்சயமாய் எனக்காய் அக்கரைக் கொண்டார். அவர் என்னை நேசிக்கிறாரா? அவரைக் குறித்துச் சொல்லப்பட்ட இக்காரியங்ளெல்லாம் உண்மைதானா? அது உண்மைதானா என்று அறிய நான் விரும்புகிறேன், அதை அவர் எனக்கு வெளிப்படுத்தும்படியாய் நீர் அவரை கேட்டுக் கொள்வீரா? என்று சொல்ல விரும்புகின்ற யாராவது இன்றிரவு இங்கே இருக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. எங்கு பார்த்தாலும் கரங்கள். 58விலையேறப்பெற்ற கர்த்தாவே உம்மை குறித்து அவ்வளவாய் எழுதப்பட்டிருக்கிறது. நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரென்று நாங்கள் அறிவோம். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் நோக்கி பார்க்கும் போது நாங்கள் இயேசுகிறிஸ்துவை காணும்படியாய் செய்ய ஜெபிக்கிறோம். நீர் செய்யும் கிரியைகளை நாங்களும் செய்வோம் என்று வார்த்தையில் வாக்களித்துள்ளீர். கடைசி நாட் களில் நீர் இந்த பூமியின் மீது பரிசுத்தாவியின் வடிவில் திரும்ப வந்திருப்பீர் என்றும் சபையானது பரிசுத்தாவியின் வல்லமையினால் முழுவதும் நிரம்பி இருக்கும் என்றும் வாக்களித்துள்ளீர், ''கொஞ்ச நேரம். பார்ப்பதினால் இந்த உலகத்திற்கு எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் அதை காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் அதை காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்'' என்று நீர் சொல்லி இருக்கிறீர். கர்த்தராகிய இயேசுவே, மனிதனுக்கு நோக்கிப் பார்க்கும்படியாய் ஒரு தருணம் இருக்கும்போது, அவர்கள் இன்றிரவு நோக்கிப் பார்த்து, அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அவரைக் காணுவார்களாக, அவர் மரித்து போகவில்லை, அவர் என்றென்றைக்குமாய் ஜீவிக்கிறார்! அவரிடத்தில் அறிக்கை செய்கிறவர்களுக்காக பரிந்து பேச அவர் ஆயத்தமாயிருக்கிறார். அருளிச் செய்யும் கர்த்தாவே. கேட்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் எல்லாம் அளிக்கப்படுவதாக. பிதாவே இந்த காரியங்கள் யாவையும் அருளிச் செய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 59இப்பொழுது வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டிய நேரம். நான் உங்களுக்காக ஜெபித்தேன். தேவன் அவைகளுக்கு பதிலளிப்பார் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது, பில்லி அதிக ஜெப அட்டைகளை கொடுத்துள்ளதாக கூறினான் என்று நினைக்கிறேன். அவைகள் 'B' எழுத்து போட்டவைகளா? சரி. நமக்கு நேரமில்லை. நான் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். என்னை மன்னிக்கவும். எனக்கு இன்னும் சில நிமிஷங்களே இருக்கின்றது. B - நேற்றிரவு நாம் எங்கே விட்டோம்? ஓ! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோமா? 'B' எழுத்திட்ட ஒன்றிலிருந்து ஆரம்பிப்போம். சரியா. எண்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. 60யாராவது கவனியுங்கள். பில்லி இங்கே வா, உங்களில் சிலர் சீக்கிரமாக வாருங்கள் நமக்கு இப்பொழுது நேரமில்லை. நீங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில் அவர்கள் செவிடாய் இருப்பதினால், அவர்களால் கேட்க முடிகிறதில்லை. ஒரு வேளை எழுந்திருக்க முடியாமலோ அல்லது ஏதோவாய் இருக்கலாம். எண்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, சரி முன்னால் வாருங்கள். முடியுமானால் இங்கே வாருங்கள், அங்க ஒன்று, இரண்டு, மூன்று. அது சரி, ஐயா மன்னியுங்கள். ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து அவர்கள் நிற்கட்டும். ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. சரி ஒன்று, இரண்டு, மூன்று பதினைந்து வரை எழுந்து நில்லுங்கள் அவ்வளவுதான் அட்டைகள் பதினைந்திலிருந்து இருபது வரை நில்லுங்கள். ஜெப அட்டைகள் ஒன்றிலிருந்து இருபது வரை நீங்கள் அருகே போய் நில்லுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பத்தொன்பது வரை. அப்படிதான. இருபதிலிருந்து இருபத்தைந்து வரை. 61உங்களில் எத்தனை பேரிடத்தில் ஜெப அட்டைகள் இல்லை? நீங்கள் இன்னமும் விசுவாசிக்கிறீர்கள். அவர்கள் வந்துக் கொண்டிருப்பதற்குள் இருபத்தைந்து வரை வந்துக் கொண்டிருக்கும்போது உங்களை நான் கேட்கின்றேன், வேதத்தில் எபிரேயர் புத்தகத்தில் ''இயேசுகிறிஸ்து நமது பிரதான ஆசாரியர்'' என்று கூறுகின்றது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடியவர். நம்முடைய பிரதான ஆசாரியர், வந்து நமது மத்தியில் தாம் யாரென்பதை அறியப்படுத்தும்போது, ஊமையாய் நடத்தப்படுகின்ற மந்தையைப் போன்று இந்த நாளில், மந்தமாக அமர்ந்திருக்கப் போகின்றீர்களா. இல்லை ஐயா, எந்தவித போராட்டத்திற்கும் தயங்கா இருதயத்தோடு நாம் எழும்பி நின்று கிரியைச் செய்வோம், ஊமையாய் நடத்தப்படுகின்ற மந்தையை போன்றிருக்க வேண்டாம். ஒரு வீரனாயாரு! நீங்கள் இந்த விதமாக பார்த்து விசுவாசியுங்கள். வேதத்தை ஆராய்ந்து அவர் என்ன வாக்களித்திருக்கிறார் என்று பாருங்கள், சரி. நாங்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டோம். நேரடியாக ஜெப வரிசைக்குப் போவோம். நாம் மறுபடியும் ஜெபிப்போம். 62கர்த்தராகிய இயேசுவே, இது இப்பொழுது உம்முடைய கரங்களில் இருக்கின்றது. நான் உம்முடைய கரங்களில் இருக்கின்றேன். கர்த்தாவே, நீர் சொன்ன உம்முடைய வார்த்தைகளாகிய, ''சோதோமின் நாட்களில் நடந்த போன்று“, என்பதையும் நான் குறிப்பிட்டதையும் எடுத்துக் கொள்ளும். யோவான் 14:12-ல் நீர் போய்விடுவதை குறித்து சீஷர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னீர், ”என்னை சுவாசிக்கிறவன் நான் செய்கின்ற கிரியைகளை தானும் செய்வான்'' என்று. ''பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்'' என்று வேதம் சொல்லுகின்றது. அவரே வார்த்தையாயிருக்கிறார். தீர்க்கதரிசிகள் வந்தார்களென்றும், ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி. அந்த தலைமுறைக்கு அந்த வார்த்தையை ஜீவிக்கும்படியாய் செய்தார்களென்றும், இராஜாக்களை சபித்து நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தார்களென்றும் நீதிமான்களை வெளியே கொண்டு வந்தார்களென்றும், காணாமற் போனவர்களை மீட்டுக் கொண்டார்களென்றும், தீர்க்கதரிசிகளிடத்திற்கு வார்த்தை வந்தது என்றும் நாம் அறிவோம். 63இப்பொழுது இந்த கடைசி நாட்களில் கர்த்தாவே நீர் வாக்களித்திருக்கிறீர், “சோதோமின் நாட்களில் நடந்தது போன்று” என்று அந்த நாளின் மத்தியான வேளையிலே அங்கே ஆபிரகாம் அந்த சிறிய, வெளியே அழைக்கப்பட்ட சபை, உட்கார்ந்துக் கொண்டிருந்த போது, என்று நீர் சொல்லியிருக்கிறீர். இன்றைக்கு நாங்கள் உலகத்தை நோக்கி அதனூடாக பார்ப்போமானால் பிதாவே சரியாக அப்படியே சோதோமைக் காண்கிறோம். புறஜாதியார் தலைகீழாக்கப்பட்டதையும், வெதுவெதுப்பாயுள்ளதையும் காண்கிறோம். ஆபிரகாமுக்கு முன்னால் தோன்றின மூன்று தூதர்களையும் நாங்கள் காணுகிறோம், அவர்களில் இருவர் வெதுவெதுப்பான சபையாகிய லோத்தினிடத்திற்குப் போய் அவர்களை வெளியே அழைக்க முயற்சித்தார்கள். இரண்டு பேர்கள் அங்கே போனார்கள். ஒரு நவீன பில்லிகிரஹாம் அவர்களை வெளியே அழைக்கும்படி, அற்புதங்கள் இல்லை, வெறுமனே அவர்கள் கண்களை குருடாக்கினார்கள். சுவிசேஷத்தை பிரசங்கிப்பது அதைதான் செய்கிறது. ஆனால் அங்கே ஆபிரகாமின் கூட்டத்தாரோடு ஒருவர் தங்கிவிட்டார். அது தெரிந்துக் கொள்ளப்பட்ட வெளியே அழைக்கப்பட்ட, சோதோமுக்குள் இல்லாத, சோதோமுக்கு வெளியாக பிறந்தவர்களை உண்மையான சபையை, இன்றைக்குள்ள ஆபிரகாமின் வித்தைக் குறிக்கின்றது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த இந்த மனிதன், ''உன்னுடைய மனைவியாகிய சாராள் எங்கே“, என்றார். ''அவள் உமக்கு பின்பக்கமாக கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். அவர், ''நான் உன்னை ஒரு பிராண உற்பவகால திட்டத்தின்படியே சந்திக்கப் போகிறேன்'', என்றார். அவள் நகைத்தாள். அவர், ''அவள் ஏன் நகைத்தாள்'', என்றார். அவருடைய முதுகு அவளுடைய கூடாரத்தை நோக்கினவாறு இருக்க, அவளுடைய உள்ளத்தில் அவள் நினைத்ததையும் சொன்னதையும் அவர் வகையறுத்தார். 64தேவகுமாரனாகிய நசரேயனாகிய இயேசு, அவருடைய வார்த்தையில் ''அந்த நாளில் இருந்தது போன்று மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் இருக்கும்'' என்று நமக்கு சொல்லியிருக்கிறார். சோதோமின் நாட்களிலிருந்து இந்த நாள் மட்டுமாய் ஹாம் என்ற முடிவை பெயரில் கொண்டவனாய் ஒரு சீர்திருத்தக்காரனும் இல்லாதிருக்கின்றது, பிதாவே ஒரு விநோதமானகாரியமாய் இருக்கிறது. உம்முடைய ஊழியக்காரன், பில்லி கிரஹாம் சோதோமில் அவனுடைய ஊழியம் செய்து கொண்டிருக்கிறான். இப்பொழுதும் பிதாவே இங்கே இன்றிரவு நீர் ஆபிரகாமின் வித்தை ரட்சிக்க வேண்டுமென்றும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுடைய பரிசுத்த ஆவினால் அவர்களை நிறைக்கும்படியாய் நான் ஜெபிக்கிறேன். இதற்குப் பின்பு உடனடியாக மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன் இந்த அடையாளத்தைச் செய்தார். பின்பு வாக்குப்பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வந்தார். தேவனே ஆபிரகாமின் வித்தாகிய நாங்கள் 2000 வருடங்களாக அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறோம். அநேகர் நித்திரையாய் இருக்கிறார்கள். இது தான் ஏழாவது ஜாமம். “இதோ மணவாளன் வருகிறார்'' என்கிற சத்தத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, ஜனங்களுடைய புரிந்துக் கொள்ளுதல் திறக்கப்பட்டு குமாரன் வருவதற்கு முன்னதாக இந்த அடையாளமானது வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் காணும்படியாய் இன்றிரவு அருள் செய்யும். வெண்கலச் சர்ப்பமானது கிறிஸ்துவுக்குப் பாவனையாயுள்ளது போன்று வரப்போகின்ற குமாரனும் அவருடைய வருகையின் அடையாளமும் (இயற்கையில்) ஆபிரகாமின் இராஜரீக வித்தாகிய இயேசுகிறிஸ்துவின் இன்றைய வருகைக்கும் ஆவிக்குரிய பிரகாரமாக பாவனையாயிருக்கிறது அதை அளியும் கர்த்தாவே எங்களை உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுத்தவர்களாய், இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 65வியாதியஸ்தர்களுக்காய் ஜெபிப்பதற்கு முன்பாக நான் ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வரத்தைக் குறித்து அபிப்பிராயத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். ஒரு வரம் என்று சொல்லுவது, ''நான் இங்கே போவேன். இதை எடுப்பேன். நான் அதை எடுப்பேன். நான் அதை செய்வேன்'' என்று நீ கூறும் படியாய் தேவன் உனக்கு கொடுத்து சொல்லுகிறது போல ஏதோ ஒரு காரியமல்ல. அது வரங்களலல அநேக ஜனங்கள் அந்த விதமாய் நினைக்கிறார்கள். ஆனால் அவாகள் தவறாக அபிப்ராயங் கொண்டிருக்கிறார்கள். தேவன உன்னை உபயோகிக்கும்படியாய் நீ எவ்விதத்தில் வழியிலிருந்து உன்னை அப்பாலே வலக்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்திருப்பதே தேவனுடைய ஒரு வரமாகும். ஒரு வரம் சொல்லுவதெல்லாம் அதுதான். புரிகின்றதா? இயேசுதாமே இதைச் சொல்லவில்லையா யோவான்: 5:19-ல் ''மெய்யாகவே மெய்யாகவே நான்உங்களுக்குச் சொல்லுகிறேன்; குமாரன தாமாய் ஒன்றையும் செய்யார். வியாதியஸ்தர்கள் யாவரும் கூடியிருந்த தான அந்த குளத்தை அவர் கடந்து சென்ற போது, மூட்டுகள் மடங்கப்பட முடியாத வியாதியினால் கட்டுண்ட ஒருவனை சுகமாக்கினார். குமாரனால் தாமாய் ஒன்றையும் செய்ய முடியாது, பிதா செய்ய காண்கின்றது எதுவோ அதை மட்டுமே செய்வார். இது நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்கிறார். அவர் அந்தக் கிரியைகளைச் செய்கிறார்'' என்றார் அவர். 66இப்பொழுது அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஜனங்களே எந்த ஒரு மனுஷனையும் நோக்கிப் பார்க்கத் துணியாதேயுங்கள். கிறிஸ்துவை நோக்கிப் பார். அவரைத் தானே நோக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் அவர், சோதோமில் நடந்தது போன்று, இந்த கடைசி நாட்களில் மனித மாமிசத்தில் வெளிப்படுவார் என்று வாக்களித்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய மாமிசம், என்னுடைய மாமிசம், நாம் சற்று நம்முடைய இருதயத்தைத் திறந்து, நம்முடைய சொந்த சிந்தனைகளை வெளியே எடுத்துப் போட்டு இன்றிரவு வார்த்தையானது தன்னுடைய கிரியைச் செய்யவிடுங்கள், அப்பொழுது கர்த்தருடைய மகா பெரிய அவருடைய ஆவியின் வரங்கள் நமக்கு முன்பாக வெளிப்படுவதை நாம் காண்போம். உண்மையான பயபக்தியோடு இருங்கள். ஒருவரும் போய்விடக் கூடாது. அமைதியாய் இருந்து ஜெபியுங்கள், நீங்கள் இதை விரும்புகிறீர்கள் என்று நான் நிச்சயமாய் அறிவேன். இது ஒரு ஏமாற்றமானது என்று இங்கிருப்பவர்களில் யாரேனும் கருதுவீர்களேயானால், மேடைக்கு வரும்படியாய் நான் அறை கூவுகிறேன். யாராயிருந்தாலும் சரி! அப்படி நீங்கள் பயப்படுகிறீர்களேயானால், அதைக் குறித்து ஒன்றுஞ் சொல்லாதிருங்கள். தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக, இங்குள்ள எல்லா ஆவிகளையும் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், என்னுடைய கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறேன். 67யோவான்: 4-ம் அதிகாரத்தைப் போன்று இன்றிரவு இங்கே ஒரு படம் (காட்சி), ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் ஒன்றாய்ச் சந்திக்கிறார்கள், அதாவது அவர்கள் ஜீவியத்தில் முதன்முறையாக. உன்னை எனக்குத் தெரியாது. ஒருவேளை நீ என்னை அறிந்திருக்கலாம், பத்திரிகைகள் மூலமாகவோ, கேள்விப்பட்டோ, ஆனால் எனக்குத் தெரியாது உனக்கு அது தெரியும். நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்கள். கிணற்றங்கரையிலே ஒரு ஸ்திரீயை நமது கர்த்தர் சந்தித்தது போன்று ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் நம்முடைய சகோதரர்களில் ஒருவனைப் போன்று வருவேனேயானால், ''தேவன் எனக்கு சுகமளிக்கும் வரத்தைக் கொடுத்திருக்கிறார்'' என்று சொல்லுவேன். உங்களுக்குத் தெரியும் சுகமளிக்கும் வரம் என்றால் என்னவென்று? சுகமளித்தலில் விசுவாசம். புரிகின்றதா? யாரோ ஒருவருக்கு ஜெபிக்கும்படியாக, நீ உன்னுடைய விசுவாசத்தை அனுப்புகிறாய். அவ்வளவுதான் சுகமளிக்கும் வரமெல்லாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊழியக்காரனும் அதை உடையவனாய் இருக்க வேண்டும். புரிகின்றதா. சுகமளிக்கும் வரம் உன்னிடத்தில் இருக்கவேண்டும். உன்னை சுகப்படுத்துகிற வல்லமை உனக்கு உள்ளாக இருக்கிறது. பரிசுத்த ஆவி. அது தானாய் தன் வழியே வெளியே வரும்படியாய் நீ விடவேண்டும் அவ்வளவுதான். 68ஒரு மரத்திற்குள்ளாய் இருக்கின்ற ஜீவனைப் போன்று. அது ஆப்பிள் கனிகளைக் கொடுக்கும்படியாய் , நீ அதன் மேல் ஆப்பிள்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டிய அவசியமில்லை. அதை வெறுமனே தரையில் நடுகின்றாய், அது குடித்து கனிகளை வெளி தள்ளுகிறது. அந்த விதமாகத் தான் நீ பரிசுத்தாவியைச் செய்கின்றாய். அது உனக்கு உள்ளாக இருக்கின்றது. வற்றாத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிலிருந்து, நீ பருக வேண்டும். அது ஆவியின் கனிகளை வெளியே கொண்டு வந்து தள்ளும் புரிகின்றது? இப்பொழுது நான், உன்னை அறியாதவனாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். தேவன் அதை அறிவார். நீ முற்றிலுமாய் ஒரு அந்நியனாய் இருக்கின்றாய். இப்பொழுது நான் போய் உன் மேல் கைகளை வைத்து “சகோதரியே, நீ சுகமடையப் போகின்றாய்'' என்று சொல்வேனேயானால், உன்னால் அதை விசுவாசிக்கக் கூடும். அது சரியாகவும் இருக்கும். ஆனால் இப்பொழுது அவர் வருவாரேயானால் புரிகின்றதா, அது கடந்து போன நாட்கள், பெந்தேகோஸ்தின் நாட்கள். இப்பொழுது நாம் அதையெல்லாம் கடந்ததான நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பெந்தேகோஸ்துகளை கடந்தவர்களாயிருக்கிறோம். நம்மைப் போன்றே மெத்டிஸ்டுகளும், லூத்தரன்களும். நாம் தொடர்ந்து மேலாக, கர்த்தருடைய வருகைக்கு, இயேசு கிறிஸ்து செய்த அதே ஊழியத்திற்கு, சரியாக பார்க்கப் போனால் அவர் தாமே இருக்கின்றதான நிலைக்கு வந்துள்ளோம். பிரமிட்டின் மேலுள்ள தலைக் கல்லைப் போன்று, ஒவ்வொரு கல்லும் இசைவாய்ப் பொருந்தும்படி அவ்வளவாய் அவைகள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். சபையானது தலைக் கல்லைப் பெற்றுக் கொள்ள, அந்த நிலைக்கு வர வேண்டியதாயிருக்கிறது. அதன் பின்பு, சரீரம் எழுப்பப்பட்டு பிறகு முழுமையாய் உயிர்த்தெழுதலில் எடுத்துக் கொள்ளப்படும். 69நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் சொல்லுகின்ற இந்த காரியங்களெல்லாம் உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் செய்துள்ள ஏதோ ஒன்றை, நீங்கள் செய்திருக்கக் கூடாததொன்றை, உனக்கு தவறான ஏதோ ஒன்று, அல்லது பணச் சம்மந்தமானதோ, குடும்பத்தைப் பொருத்த ஏதோ ஒன்றை, எனக்குத் தெரியாததை கர்த்தராகிய இயேசுவானவர் எனக்குச் சொல்லுவாரானால், நீங்கள் என்னை நம்புவீர்கள். அவருடைய ஊழியக்காரன் என்று நம்புவீர்கள் இல்லையா? நீ ஒரு கிறிஸ்தவள். பாருங்கள், உன்னுடைய ஆவியை அறிந்து கொளளும்படியாக நான் சற்று உங்களிடம் பேசினேன். பாருங்கள் அந்த விதமாகத்தான் அவர் கிணற்றண்டையில் செய்தார். அவர் “தாகத்திற்குத் தா” என்று கேட்டார். நீ ஒரு கிறிஸ்தவள். நீ ஒரு விசுவாசி. சரியா, ஒரு தொத்தி தொத்தி போகிறவள் அல்ல. ஒரு விசுவாசி. சரியா, உனக்குள்ள முக்கிய தொந்தரவு உன்னுடைய கழுத்து. உன்னுடைய கழுத்திற்குப் பின்பக்கமாக ஒரு வளர்ச்சி இருக்கிறது. அந்த வளர்ச்சி உனக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றது. அது உன்னுடைய கண்களைப் பாழாக்குகின்றது. அது சரியா? அது கர்த்தர் சொல்லுகிறதாவது. அது சரியே. நீ அதை விசுவாசிப்பாயானால் அது போய்விடும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, இப்பொழுது நீங்கள் போகலாம் 70எப்படி ஐயா இருக்கிறீர்கள்? உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னை இன்றும் நான் சாவதானமாக்கிக் கொள்ளக் கூடுமானால், பரிசுத்தாவியானவர் என் உதடுகளையும் என் கண்களையும் கூட எடுத்து உபயோகிப்பார். நீங்கள் எப்பொழுதாவது கனவு கண்டதுண்டா? நிச்சயமாக உன்னில் சில பகுதிகள், உன்னுடைய ஐம்புலன்களும் செயலற்றதாய் இருக்க வேண்டும், உங்களுக்கு ஒரு உணர்வும்; ஒரு உள் உணர்வும் (sub conscious) இருக்கின்றது. உன்னுடைய முதல் உணர்வு இங்குள்ளது உன்னுடைய உள் உணர்வு அங்கே இருக்கின்றது. நீ உன்னுடைய உள் உணர்வுக்குள் போய் சொப்பனம் காணுவதற்கு, உன்னுடைய முதல் உணர்வுகள் இங்கே செயலற்றதாயிருக்க வேண்டும். ஆனால் சொப்பனத்திற்குப் பிறகு திரும்ப உன் உள் உணர்விற்கு வரும்போது அது அப்படியாய் நீ என்ன சொப்பனங் கண்டாய் என்பதை நினைவு கூரும்படியாய் பதிய வைக்கிறது. இப்பொழுது, ஞான திருஷ்டிகாரர்கள், தீர்க்கதரிசிகள், அவர்களுடைய உள் உணர்வு அங்கே இருக்கிறதில்லை. அது இங்கேயே இருக்கிறது, நீ உன்னுடைய ஐம்புலன்களை விட்டு அப்பாலே போக வேண்டியதில்லை. நீங்கள் நின்று கொண்டு இருக்கின்ற வண்ணமாகவே சொப்பனங் காண்பீர்கள்! நீங்கள் அதை சொப்டனம் என்று அழைப்பீர்கள்... நான், ''ஒரு சொப்பனத்தைச் சொப்பனம்'' என்று சொன்னால் உன்னால் அதைச் செய்ய முடியாது. நானும் உனக்காக ஒரு தரிசனத்தைக் காணமுடியாது. தேவனால் தான் அதைச் செய்ய முடியும். ஆனால் அதை நான் காணும்படியாக தூங்கப் போக வேண்டியதில்லை. இங்கே நான் நின்று கொண்டே அதைக் காணலாமே அது தேவனுடைய ஒரு வரம். என்னால் மட்டும் என்னுடைய முதல் உணர்வை அப்பாலே கொண்டு போகக் கூடுமானால், தேவனுக்கு ஏதாவது சொல்ல வேண்டிய அவசியம் இருக்குமாயின், தேவன் அந்த இன்னொரு உணர்வை எடுத்து உபயோகிப்பார். அது அவரைப் பொருத்திருக்கிறது. 71ஆனால் தேவனுடைய உதவியால் என்னால் மட்டும் கூடுமானால்... அவர் எனக்குத் தந்த இந்த ஆடைகளை அணிந்தவராய் இயேசு இங்கே நின்று கொண்டிருந்து, நீ வியாதியாய் இருப்பாயானால் அவரால் உன்னை சுகமளிக்க முடியாது. முடியாது அவர் அதை ஏற்கெனவே, அவர் மரித்த போதே அதை செய்து முடித்துவிட்டார். ஆனால் நீ எதற்காக இங்கு இருக்கிறாய் என்று நான்அறியேன். நீ ஒரு மனிதன். ஏறக்குறைய என்னுடைய வயதுள்ளவன். நான் இங்கே மேடையின் மீது முதன் முறையாய் சந்தித்தவர்களாய் நின்றுக் கொண்டிருக்கிறோம். உன்னுடைய வாஞ்சைகள் என்னவென்று அல்லது நீ என்ன செய்தாயென்று அல்லது உன்னுடைய தடைகளை எனக்குச் சொல்ல தேவனால் கூடும் என்று விசுவாசிக்கிறாயா? என்ன சம்பவித்ததென்று அவரால் சொல்லக் கூடுமானால், என்ன சம்பவிக்கப் போகிறதென்றும் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாயா? நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் கஷ்டப்பட்டு பிரசங்கித்தேன். நீங்கள் உண்மையாகவே சாவதானமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் எனக்கு காட்டாமல் நானாய் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆம் இதோ இங்கு இருக்கிறது. வெளிச்சம் அந்த மனிதனின் மேல் வருகிறது. சரி, ஐயா நீர் உமக்காக இங்கு வரவில்லை. நீர் வேறு யாருக்காகவோ இங்கு இருக்கிறீர்கள், அது உம்முடைய மகள். அந்த மகள் கலிபோர்னியாவில் வசிக்கிறாள். சில காலத்திற்கு முன்னர் ஒரு மோட்டார் விபத்தில் சிக்கிக் கொண்டாள். நான் அவளுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக நீர் இங்கே நின்றுக் கொண்டிருக்கிறீர். ஏனென்றால் அவள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனியுங்கள், நான் சில காரியங்களைச் சொல்லட்டும், அந்த மோட்டார் விபத்து கலிபோர்னியாவில் நடக்கவில்லை. டெக்ஸாஸிலுள்ள டல்லஸ்ஸில் அந்த மோட்டார் விபத்து நடந்தது அது சரியா? அவள் சுகமாகிவிடுவாள். மறந்து பேகாதேயும் அவள் நடந்து போகிறதை நான் காண்கிறேன். சரியா, விசுவாசி. போய் இப்பொழுது விசுவாசி, சகோதரனே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. 72ஸ்திரீயே எப்படி இருக்கின்றீர்கள்? நான் உனக்கு ஒரு அந்நியன். நாம் ஒருவரை ஒருவர் அறியோம். முற்றிலுமாக நாம் அந்நியர். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உம்மைக் குறித்து எதையாவது எனக்குச் சொல்வாரானால், அப்படியானால் அது உன்னை விசுவாசிக்குப்படியாய் செய்யும், இல்லையா? உனக்கு சிக்கல்கள் உண்டு. அநேக காரியங்கள் உண்டு, ஆனால் அதில் உனக்கு முக்கியமான காரியம், நீ விரைவில் சந்திக்கப் போகின்றது, ஒரு வளர்ச்சியைக் குறித்து உனக்கு நடக்க விருக்கும் ரணசிகிச்சை. அந்த வளர்ச்சி உனக்கு பக்கவாட்டில் உள்ளது. அது சரி, அது சரி. அதற்காக ஜெபிக்கும்படியாய்த் தான் நீ இங்கே இருக்கின்றாய். உன்னுடைய பெயர் என்னவென்று என்னால் சொல்லக் கூடுமானால் நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நம்புவாயா, அல்லது அது சரியாயிருக்குமென்று நம்புவாயா? மிஸ் ஹோல்மென் சந்தோஷித்துக் கொண்டு உன் வழியே போ. புரிகின்றதா? கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது விசுவாசி. சந்தேகப்படாதே. 73எப்படி இருக்கின்றீர்கள் ஸ்திரீயே? ஒருவருக்கொருவர் அந்நியர். என்னிலும் வயதில் இளையவள். ஒரு மனிதன், ஒரு ஸ்திரீ. ஒரு நொடி, எல்லாரும் உண்மையான பயபக்தியோடு இருங்கள். கர்த்தருடைய ஆவி இவ்விடத்தை விட்டுபோய் இருக்கிறது. கண்ணாடி அணிந்துக் கொண்டு இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கும் இந்த மனிதனுக்கு ஆவக்குரிய தொல்லை, அவர் சிந்தையில் இருக்கிறது. உனக்கு என்னச் செய்வதென்றே தெரியவில்லை. நீர் எல்லாம் குழம்பினவனாய் இருக்கிறாய். நீர் விசுவாசி எல்லாம் சரியானதாய் அதனின்று நீ வெளி வருவாய். ஆம் ஐயா, நீர் அதைச் செய்வீரா? சரி, இப்பொழுது பயபக்தியாயிருங்கள். இங்கே ஒரு சிறிய ஸ்திரீ நேராக இங்கே உட்கார்ந்து கொண்டு அந்த விதமாய் அவளுடைய கைகளை வைத்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீ விசுவாசிப்பாயானால் ஆம், தேவன் அதை சுகப்படுத்துவார். எனக்கு உன்னைத் தெரியாது, உனக்கு என்னைத் தெரியாது. ஆனால் நீ எதையோ தொட்டிருக்கின்றாய், நீ என்னைத் தொடவில்லை. நீ என்னிடத்திலிருந்து 20 அடி தூரத்திலிருக்கின்றாய். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகின்றார். உன்னுடைய விசுவாசம் உன்னை சுகமாக்கிற்று. நம்முடைய பெலவீனங்களினால் தொடப்படக் கூடிய, பிரதான ஆசாரியனாகிய, அந்த இயேசு இதுவாயில்லாமற் போகுமானால், அது அப்படியாயிருக்க வேண்டுமென்று நீ விசுவாசிக்க வேண்டாம். 74என்னை மன்னிக்கவும். அது போகின்ற வழியாய்த்தான் நான் பின் தொடர வேண்டியவனாய் இருக்கிறேன். இப்பொழுது பெலவீனமாகிறேன். உங்களுக்குத் தெரியும், நம்முடைய கர்த்தரை, ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்ட போது ஒரு நேரத்தில் அவர் சொன்னார்... மன்னிக்கவும், இந்த ஜெபித்துக் கொண்டிருக்கும் கருத்த ஸ்திரீ இவளுக்கு (gall bladder) பித்த நீர் பையில் தொல்லை. அதிகப்படியான இரத்த அழுத்தம். விசுவாசி ஸ்திரீயே அது உன்னைவிட்டுப் போய்விடும். ஆமென். நான் நோக்கிப் பார்த்தேன் அங்கே ஒரு கருத்த ஸ்திரீ நின்று கொண்டிருந்தாள். அவளுடைய விசுவாசம் நேராக அதை அப்படியே இழுத்தது. ஆமென். அவளுக்கு நேராகப் பின்னால் இருக்கும் ஸ்திரீ ஆஸ்துமா வியாதி உடையவளாய் இருக்கிறாள். அந்த ஆஸ்துமாவிலிருந்து தேவன் உன்னைச் சுகப்படுத்த முடியும் என்று நீ விசுவாசிப்பாயானால், நீ அதைப் பெற்றுக் கொள்வாய், நீ அதை விசுவாசிப்பாயானால். 75உன்னுடைய இருதயத்தில் நீ ஒரு வாஞ்சையை உடையவளாய் இருக்கிறாய், அது ஒரு நியாயமான வாஞ்சை. உனக்கு ஒரு குழந்தை தேவையாய் இருக்கிறது. அது உனக்குக் கிடைக்கப் பெறாததற்குக் காரணம், பெண்களுக்குள்ள கோளாறு உனக்கு இருப்பதினால், அது உண்மைதான். சரி, தேவன் அதை உனக்குக் கொடுப்பார் என்று நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் நீ யாரென்று எனக்குச் சொல்வரானால் நீ விசுவாசிப்பாயா? திருமதி லாம்பர்ட் (Lambert) இப்பொழுது நீ போகலாம், அதை நீ விசுவாசி, அது உன்னை விசுவாசிக்கச் செய்கின்றதா. தேவனே அதை அவள் பெற்றுக் கொள்ளட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விசுவாசம் உடையவளாய் இரு. ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். ஆனால் தேவன் நம்மிருவரையும் அறிவார். உன்னுடைய தொல்லைகளை கர்த்தராகிய இயேசுவானவர் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நீ விசுவாசிக்கின்றாயா? நீ இங்கு இருந்து வரவில்லை. நீ அரிசோனாவிலிருந்து வரவில்லை. நீ தூரத்தின் கிழக்கே மிச்சிகனிலிருந்து வருகிறாய். அது சரி, உனக்கு அதிக இரத்த அழுத்தமும், தமனிகள் இருகிப்போயும், கேட்பது கடினமாயும் இருக்கின்றது. அது உன்னை விட்டுவிட்டது. மிச்சிகனுக்குத் திரும்பி போ. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். தேவனில் விசுவாசமாயிரு. 76இங்கே உட்கார்ந்திருக்கும் அந்த பெண்மணி தன் தகப்பனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவருக்கு (Parkinson's) நரம்பு சம்பந்தமான வியாதியிருக்கிறது. இப்பொழுது நான் அவரைக் காண்கிறேன் அவர் நிழலிடப்பட்டிருக்கிறார். மரணத்திற்கான நிழலிடப்பட்டதுமல்லாமல், நித்திய மரணத்திற்குமாய் நிழலிடப்பட்டிருக்கிறார் ஏனென்றால் அவன் இரட்சிக்கப்படவில்லை. அது உண்மை தேவன் அவரை இரட்சித்து அவரை சொந்தமாக்குவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நம்முடைய பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவைத் தொட போதுமான விசுவாசம் உனக்கு இருக்குமாயின், நிச்சயமாக உன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் எனக்கு ஒரு தயை செய்வீர்களா? உனக்கு பக்கத்திலிருக்கும் அந்த ஸ்திரீயின் மீது உன் கரத்தை வை. அவள் தன்னுடைய சகோதரனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். ஆம். அந்த சகோதரன் சுகவீனமாய் இருக்கிறான். அவன் ஒரு குடிகாரன். அது உண்மைதான். வெறுமனே விசுவாசி, அவன் குடிப்பதை நிறுத்தி சுகமடைவான். ''உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கை கூடிடும்“. 77எனக்கு நேர் முன்பாக உட்கார்ந்துள்ள பெண்மணி ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள், ''கர்த்தாவே அது நானாய் இருக்கட்டும்'' என்று ஜெபிக்கிறாள் என்று என்னால் உனக்குச் சொல்ல முடியும். அவள் ஒரு நண்பனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள் அந்த நண்பன் இப்பொழுது, ஆஸ்பத்திரியில், புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் தனக்கும் கூட ஜெபிக்கிறாள். அவளை விட்டு அது போய் விடப் போகின்றது. திருமதி கெல்லி (Mrs. Kelly) உன் கால்களில், எழும்பி நின்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்தை ஏற்றுக் கொள் என்னுடைய ஜீவியத்தில் இந்த ஸ்திரீயை நான் கண்டதேயில்லை. தேவன் இருதய நோயைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கின்றாயா? உன்னுடையதை அவர் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? சரி அப்படியானால் ''உமக்கு நன்றி அன்புள்ள தேவனே'' என்று சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிரும். காலையில் விழித்தெழுவது உமக்கு கடினமாயிருக்கிறது. அந்த ஆர்த்தரிடீசினால் நீ மடக்க முடியாதவனாய் இருக்கின்றாய். நீர் மட்டும் விசுவாசித்து போவீரானால் நாளைக்கு உமக்கு அது இவ்விதமாயிருக்காது ஆம் ஐயா. சரி ஐயா உனக்கு கல்வாரியிலிருந்து இரத்தம் உனக்குள் பாய்ச்சப்பட வேண்டும். அது சர்க்கரை வியாதியையும் மற்றெல்லாவற்றையும் சுகப்படுத்தும். அவர் அதை செய்கிறார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? சரி நீ மட்டும் உன் முழு இருதயத்தோடு அதை விசுவாசித்தால், நீ சுகமாக்கப்பட முடியும். 78இங்கே வாரும். நீ கலவரப்பட்டிருக்கின்றாய். உனக்கு உள்ள தொல்லை அதனால் தான் உண்டாயிற்று. உன்னுடைய வயற்றில் புண் இருக்கின்றது. தேவன் அதை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? உங்களுக்கு ஒன்று காட்டப் போகிறேன். ஒரு நிமிடம் என் கைக்கடியாரத்தைக் கழற்றுகிறேன். கலவரம் அது ஒரு விதமாக கடினமானது. ஆனால், நீ ஒரு நல்ல ஆத்துமா. உம்முடைய கரத்தைக் கொடும் உம்முடைய கரத்தை நான் பிடிக்கட்டும். என்னுடைய கரத்தைப் பாருங்கள், கவனியுங்கள், உம்முடைய கரத்தை என் கரத்தின் மேல் வையும், இப்பொழுது அதைப் பாருங்கள் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்ற காரியங்களைப் பாரும். சிறிய துடிப்புகளை போன்று தெரிகிறதா? அது தான் அந்த வயிற்றுப் புண். இப்பொழுது கவனியுங்கள் உம்முடைய கரத்தை எடும். இப்பொழுது என் கை பழயை மாதிரியாய் ஆகிவிட்டது. இப்பொழுது என்னுடைய கரத்தை அங்கே வைக்கிறேன், அதை அது செய்கிறதில்லை, செய்கிறதா? ஆனால் நான் உம்முடைய கையை அதன் மேல் வைக்கிறேன். இதோ மறுபடியுமாய் அதை செய்கிறது புரிகின்றதா? இப்பொழுது ஏதோ ஒன்று அங்கே அதைப் போன்று குறிக்கின்றது. அதை உன்னுடைய சொந்த கண்களாலேயே அப்படியே காண முடிகின்றது அது சரியா? அது உண்மைதான் என்று குழுமியுள்ள ஜனங்களும் காணும்படியாக உன் கரத்தை உயர்த்து. 79இங்கே, குழுமியுள்ளோர் காணும்படியாக, உன்னுடைய கரத்தை இங்கே போடு. இப்பொழுது உன்னுடைய கரத்தை எடும் பெண்மணியே. இப்பொழுது உன் கரத்தைத் திரும்பவுமாக அங்கே வை. அது ஒரு பச்சை குடல் புண். அங்கே ஏதோ தசைகளைத் தின்று போட்டது. அது நரம்பு தளர்ச்சியின் காரணமாக பரவுகின்றது. உனக்கு ஸ்திரீகளுக்குள்ள தொந்தரவும் கூட உண்டு. சரி. இப்பொழுது, இங்கே இவள் தானே துவக்க வேண்டியவளாய் இருக்கிறாள். அப்படியே அவள் அதை அறிவாள். குழுமியுள்ளோர் தங்கள் தலைகளை குனிந்து ஜெபிக்கும் படியாய் நான் விரும்புகிறேன், ஏனென்றால் இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போகும். இயேசு சொன்னார், ''என்னுடைய நாமத்தினால் நீங்கள் பிசாசுகளைத் துரத்துவீர்கள்“ என்று. உங்களுக்கு இந்த குடல் புண் தேவையில்லையென்றால் இப்பொழுது உங்கள் தலைகளை கீழே தாழ்த்துங்கள். நீங்கள் இங்கே கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உன்னிடத்தில் குடல் புண் இருக்கின்றது. இப்பொழுது நீ என்னுடைய கரத்தை கவனித்து நான் என் கரத்தை அசைக்காமலிருக்கும்படியாய் பார்த்துக் கொள். பரலோகப் பிதாவே இந்த ஸ்திரீயைச் சுகப்படுத்தும்படியாய், உம்முடைய கிருபைகளும் இரக்கங்களும் இவள் மேலிருப்பதாக. இவள் என்னுடைய கரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஏதாவது மாற்றம் உண்டாகிறதா என்பதைக் காணும்படியாக, பிதாவே அவள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் நரம்பு தளர்ச்சியாயிருக்கின்றபடியினால் அவளுடைய விசுவாசத்தை நான் அறிவேன், தேவனே, நீர் அவளுக்கு உதவி செய்யும்படியாய் நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தினால் அவளுக்கு உதவி செய்யும். 80இப்பொழுது, நான் என் கண்களை இன்னும் திறக்கவில்லை, ஆனால் என் கரம் இன்னமும் இருந்தது போலவே இருக்கின்றது என்று அந்த ஸ்திரீ அறிவாள். ஸ்திரீயே அது சரிதானே? இப்பொழுது நன்றாக கூர்ந்துக் கவனி. ஆக இது ஏதோ ஒரு காட்சியை காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறார் என்பதை அறிவிக்கும்படியாய், அவர் ''என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவீர்கள்'' என்று சொல்லியிருக்கிறார். இப்பொழுது நான் என் கரத்தை அப்படியே ஆடாமல் வைத்திருக்கிறேன். இந்த விதமாக நான் கரத்தை பிடிக்கிறதில்லை. பாருங்கள் அது எல்லா நேரத்திலும் அங்கே இருக்கின்றது. பாருங்கள் அது எப்படி வீங்குகிறது என்று? எல்லா நேரத்திலும் இன்னும் மோசமாக ஆகிக் கொண்டே போகின்றது. ஏனென்றால் நான் பிடித்துக் கொண்டே இருக்கின்றேன். என்னுடைய கரம் முழங்கை மட்டும் மரத்துப் போயிறறு. கொஞ்ச நேரம் அதையே கவனியுங்கள். 81கர்த்தராகிய இயேசுவே, ஒரு காட்சிக்காக அல்ல (நாங்கள் அதை செய்யக் கூடாது). ஆனால் உம்முடைய வார்த்தை நிறைவேறும்படியாய்... நீர் தேவன் என்று காட்டுவதற்காக நீர் ஜனங்களை சொந்தமாக்கவில்லை. ஆனால் அது வார்த்தையை நிறைவேற்றுகிறதாயிருக்கிறது அந்த விதமாகவே பிதாவே இந்த பிசாசிலிருந்து. இந்த நல்ல ஸ்திரீயானவள் சொந்தமாக்கப்படக் கூடும் என்று நான் என்னுடைய விசுவாசத்தினால் விசுவாசிக்கின்றபடியினால், இன்றிரவு இதை நான் செய்கிறேன். சாத்தானே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், உனக்கு கட்டளை இடுகிறேன். அவர் வெற்றி சிறந்து வியாதியெல்லாம் அவருடைய பாதத்தின் கீழ் இருக்கிறது. அவருடைய ஊழியக்காரன் என்ற முறையில் அதை ஆரம்பிக்கிறேன் இயேசுவின் நாமத்தினால் அந்த ஸ்திரீயை விட்டுவிடு, அவளை விட்டு வெளியே வா. நான் இன்னும் என் கரத்தை அசைக்கவே இல்லை. இந்த ஸ்திரீ அதற்குச் சாட்சி பகருகின்றாள். என் கரத்திற்கு ஏதோ சம்பவித்தது, இல்லையா? அது சரி என்றால் “ஆமென்'' என்று சொல்லுங்கள். இப்பொழுது அது போய்விட்டது இல்லையா? நீ சுகமாக்கப்பட்டாய் இதோ அவள் இருக்கின்றாள். இங்கே பாருங்கள், என்னுடைய கரத்தை நீட்டுகிறேன், இப்போழுது உன்னுடைய கரத்தை என் கரத்தின் மேல் வை. அப்படியே இருக்கிறது. நீ சுகமாக்கப்பட்டாய், போங்கள், போய் உன்னுடைய இரவு ஆகாரத்தைச் சாப்பிடு இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கினார். ''என்னுடைய நாமத்தில் அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்''. ஆம். 82நீங்கள் விசுவாசிக்கிறீர்களா சகோதரியே? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உனக்குள்ள அந்த ஆஸ்துமா நிலைமையை எடுத்துப் போட்டு உன்னை சுகப்படுத்த தேவனால் கூடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? சரி ''கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி நான் என் முழு இருதயத்தோடு உம்மை விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டு, நீ உன் வழியே போகலாம். ஐயா நீர் எப்படி இருக்கிறீர்? நரம்பு தளர்ச்சியின் காரணமாக ஒரு விதமான அடைப்பு உண்டாகி, இதயம் உமக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலமாக துடிக்கிறது. இரட்டை துடிப்புகள், ஒரு பக்கத்தில் இரண்டும் இன்னொரு பக்கத்தில் ஒன்றுமாகத் துடிக்கின்றது. சரி ஐயா, இப்பொழுது அது நின்றுவிட்டது. போகலாம். உம்முடைய விசுவாசம் உம்மை சுகமாக்கிற்று ஐயா. உம் முழு இருதயத்தோடு விசுவாசித்துக் கொண்டு போம். சரியா. இன்னொரு கெட்டுப் போன வயிறு. இயேசு உன்னை சுகமாக்குகிறார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? “கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டே போம். அதை விசுவாசி. நீ யாரென்று அவரால் சொல்லக் கூடுமானால், நிச்சயமாக உன்னை சுகப்படுத்த அவரால் கூடும். நான் உனக்கு ஒரு வார்த்தையும் சொல்லாமல் வெறுமனே என் கைகளை உம்மேல் வைத்தால், அங்கேயே உட்கார்ந்துக் கொண்டே சுகமானீர் என்று நீ விசுவாசிப்பாயா? நீ விசுவாசிப்பாயா? “இயேசு கிறிஸ்துவே நன்றி'' என்று சொல்லிக் கொண்டு உன் வழியே போம். நீ விசுவாசிப்பதுதான் அது. வாருங்கள். அங்கேயே உட்கார்ந்துக் கொண்டு இருக்க தேவனால் உம்முடைய முதுகு வலியை சுகமாக்கினார் என்றால் உம்மால் விசுவாசிக்கக் கூடுமா? சரி ''கர்த்தாவே உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டு உம் வழியே போம். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. விசுவாசித்து போம். ஐயா, தேவன் உன்னை சுகப்படுத்தவில்லையென்றால் ஒரு நாளில் நீ முடமாகி இந்த விதமாக ஒரு தடியுடன், அந்த ஆர்த்தரிடீஸ் வியாதியுடன் நடந்துக் கொண்டிருக்க போகின்றீர். ஏன் இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்ளக் கூடாது? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீ உன் வழியே போய், “கர்த்தாவே உமக்கு நன்றி'' என்று சொல். அதை காலின் கீழ் போட்டு மிதித்து விட்டு, களி கூர்ந்துக் கொண்டு உன் வழியே போ. 83இயேசு உன் முதுகை சொஸ்தமாக்கி உன்னை சுகப்படுத்துகிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? சரி ''அன்புள்ள தேவனே உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டு உம் வழியே போம். ஸ்திரீயே இங்கே வாரும். நீ எதைக் குறித்து பயப்படுகின்றாய்? நீ பயப்படுகின்றதற்கு காரணம், ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு உனக்கு நின்று போகும் சமயம். நான் என்ன சொல்லுகிறேன் என்று உனக்கு புரிகின்றதா, ஒரு ஸ்திரீயின் மாறுதல். எல்லாவற்றிற்கும், ஒரு சாயங்காலம் காலதாமதமானால் சோர்ந்து போகின்றாய். உன்னுடைய வேலையை உன்னால் செய்ய முடியவில்லை. நீ அவ்வளவு களைத்துப் போகின்றாய். அது அப்படி தானே? சரி, இப்பொழுது அது எல்லாம் சரியாகிவிட்டது. போகலாம் உன் விசுவாசம் உன்னை சுகமாக்கியது. இன்னொரு கலவரப்பட்ட நிலை. ஆனால் உன்னுடைய ஜீவிய காலமெல்லாம் நீ கலவரப்பட்டவனாயிருந்தாய். நீ வாலிபமாய் இருந்த போது சற்று பயந்தவனாய் இருந்தாய். சிறிது அச்சமுற்றவனாகவே இதுகாறும் ஜீவித்துக் கொண்டு வந்தாய். ஆனால் இப்பொழுது பார்த்தாலோ ஏதோ உன்னை இறுக பற்றிக் கொண்டது போலிருக்கின்றது. எல்லா நேரத்திலும் நீ ஒரு அழுத்தத்திற்குள் காண்ப்படுகின்றாய். அது சரிதானே? இப்பொழுதே நீ என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பாயேயானால் இனி அது அப்படியாய் இருக்காது. போம், விசுவாசியும். 84அங்கே வெளியே இருக்கின்ற உங்களில் எத்தனை பேர் உங்கள் இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எல்லா புருஷர்களையும் ஸ்திரீகளையும், ஒருவர் மேல் ஒருவர் கரங்களை வையுங்கள் என்று கட்டளையிடுகிறேன். தேவனுடைய வார்த்தையாய் இருக்குமாயின், ஒரு பகுதியாயிருந்தாலும் பரவாயில்லை. முழுவதுமாய் இருந்தாலும் பரவாயில்லை. இயேசு கிறிஸ்து சொன்னார் என்னுடைய நாமத்தினால் பிசாசுகளை துரத்துவார்கள் என்று. ''தேவனுடைய வார்த்தை இருதயத்தின் சிந்தனைகளையும் உள்ளிந்திரியங்களையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று சொன்னார். “அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சுகமடைவார்கள்'', என்று இயேசு சொன்னார். இங்குள்ள விசுவாசிகள் யாவரும் அதற்கு ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையார் ”ஆமென்“ என்று சொல்லுகிறார்கள் - ஆசி). அப்படியானல் நீங்கள் விசுவாசிகள். அப்படியானால் உன்னுடைய கரம் வைக்கப்பட்டிருக்கின்ற நபருக்காக ஜெபியுங்கள், ஏனென்றால், அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறார்கள், நாம் யாவரும் ஒன்றாக சேர்ந்து ஜெபித்து எதிராளியை தோற்கடித்து, இயேசு கிறிஸ்துவினுடைய சமுகத்தில் இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதியஸ்தனும் சுகமாகும்படியாய் செய்வோம். 85சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனின் பிறப்பிடமே, எல்லா நன்மையான ஈவுகளையும் தருபவரே, உம்முடைய ஆசீர்வாதத்தை இந்த ஜனங்கள் மீதில் அனுப்பும், சாத்தானே, நீ யுத்தத்தில் தோல்வியுற்றாய். இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். கிறிஸ்தவர்களே ஒருவர்மேலொருவர் கரங்களை வையுங்கள். அவர்கள் விசுவாச ஜெபத்தை ஜெபிக்கிறார்கள். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று நீர் சொல்லியிருக்கிறீர். அவர்கள் ஒவ்வொருவரும் ''ஆமென்'' என்றார்கள். அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ”இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களை தொடரும்'' என்று நீர் சொன்னபோது, இவர்கள் உம்முடைய இருதயத்தின் வாஞ்சைக்கு “ஆமென்” என்றார்கள். அவர்கள் ஒருவர் மேலொருவர் கரங்களை வைத்திருக்கிறார்கள். சாத்தானே நீ தோற்றுபோனாய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ அவர்களைவிட்டு வெளியே வா. இந்த இடத்தை விட்டு, இந்த கட்டிடத்தை விட்டு வெளியே போ என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சொல்லுகிறேன். ஒரு விசுவாசி உங்கள் மேல் கரத்தை வைத்திருக்கிறான், விசுவாச ஜெபம் ஜெபிக்கப்பட்டது. உன்னுடைய வியாதியை விட்டு விட நீ ஆயத்தமாய் இருக்கிறாய், அதை குறித்ததான உன்னுடைய சிந்தையை விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறாய் என்று விசுவாசிக்கின்ற ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும் தேவனுடைய வார்த்தை உங்கள் இருதயத்திற்குள் போகும்படியாய் ஏற்றுக் கொண்டவர்கள், உங்கள் கால்களில் எழும்பி நின்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆமென்! ஆமென்! இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி அவருக்கு துதியை கொடுங்கள், ஏனெனில் எல்லாம் முடிந்துவிட்டது.